பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி
உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்
கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று 5
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங் கமைக அம்பல தெவனே.

ஒரு கடல்.

அந்தக் கடலில் பெரிய பெரிய அலைகள் குருத்து மண்ணைக் கொண்டுவந்து கரைநெடுகிலும் திணித்துத் திணித்து வைத்திருக்கிறது.

ஒரு புன்னை மரம் அந்தக் கடல்கரையில் இருக்கிறது. அந்தப் புன்னை மரத்தைக் கடல் அலைகள் நனைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் புன்னைமரம் பூவாப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.

தேனீக்கள் அந்தப் புன்னை மரத்தில் தேன் சேகரித்துக் கொண்டிருக்கின்றன.

தேனீக்கள் தேன் சேகரித்ததும் தேன்கூட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

எனக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவன் திருமணம் செலவுக்குப் பணம் சம்பாத்தியம் பண்ண வெளிநாட்டுக்குப் போய் இருக்கிறான். பணம் சம்பாத்தியம் பண்ணியதும் அவன் என்னிடம் திரும்பி வருவான். தேன் சேகரித்ததும் தேனீக்கள் தேன் கூட்டுக்குத் திரும்பி வருவதைப்போல்.

-உலோச்சனார்
குறுந்தொகை 175