முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே

ஒரு பாலைவனம்.

வெயில் அந்தப் பாலைவனத்தில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பாலைவனத்தில் காற்றும் பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.

அந்தப் பாலைவனத்தில் ஒரு இலவ மரம் இருக்கு. அந்த இலவ மரத்தின் அடிமரம் தடியாருக்கு. அடிமரத்தில் முள்ளும் இருக்கு. அந்த இலவ மரத்தைக் காட்டுக் கொடிகள் பின்னிக்கொண்டிருக்கின்றன. அந்தக் காட்டுக் கொடிகள் காய்ந்திருக்கிறது. அந்த இலவ மரத்தில் காற்று பலமாக மோதுகிறது. அந்த இலவ மரத்தின் கிளைகள் ஓடிகின்றன.

அந்தப் பாலைவனத்தில் ஒரு மூங்கில் புதர் இருக்கு. பெண் யானைகள் தங்கள் குட்டிகளோடு அங்கே நின்றுகொண்டிருக்கின்றன. அந்தப் பெண் யானைகள் அங்கே தண்ணித் தாகத்தோடு நின்று கொண்டிருக்கிறது.

தாகத்துக்குத் தண்ணி குடிக்கிறதுக்கு அந்தப் பெண் யானைகளுக்கு அந்தப் பாலைவனத்தில் எங்கும் எங்கும் தண்ணீர் இல்லை. அந்தப் பெண் யானைகள் இளைப்பாறுவதற்கு அந்தப் பாலைவனத்தில் நிழலும் இல்லை.

வெயில் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த பெண் யானைகள் தங்கள் குட்டிகளோடு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் அவைகள் வருத்தத்தோடு நின்று கொண்டிருக்கின்றன.

முட்டத்திருமாறன்
நற்றிணை 105