கவலை யாத்த அவல நீளிடைச்
சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத் 5
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே.

 

ஒரு பெரிய தோட்டம்.

அந்தப் பெரிய தோட்டத்தில் ஒரு பெரிய கிணறு இருக்கிறது. அந்தப் பெரிய கிணற்றில் தண்ணீர் ‘கெத்துக் கெத்து’ன்னு கெடக்கு.

அழகான ஒரு பசு அந்தக் கிணற்றில் தவறி விழுந்திருக்கிறது. அது வெளியே வரமுடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

அது ஒரு இரவு நேரம்.

கிணற்றில் விழுந்துகிடக்கிற பசுமாடு வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை ஒரு மனிதன் பார்க்கிறான். அவன் அந்தப் பசு படுகிற இன்பத்தைக் கண்டு மன வேதனைப்படுகிறான். அவனால் அந்தப் பசு படுகிற துன்பத்தை வேறு யாரிடத்திலும் சொல்ல முடியவில்லை. அவன் பிறவியிலேயே வாய் பேச முடியாத ஊமை.

கூவன் மைந்தனார்
குறுந்தொகை 224