ஒன்று தெரிந்து உரைத்திசின்- நெஞ்சே! புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று,
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து,
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் 5
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே;
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், 10
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே.
ஒரு பாலைவனம்.
அந்தப் பாலைவனத்தில் இரண்டு நரிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவுக கணவனும் மனைவியும்.
ஆண் நரி வேட்டைக்குப் போய்ருக்கு.
பாலைவனத்தில் வெயில் கடுமையாருக்கு.
பாலைவனத்தில் எங்குமே நிழல் இல்லை.
பெண் நரி ஒரு நிழலைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது.
அந்தப் பெண் நரியின் மார்புக் கொம்புகள் மெலிந்து தோல்தான் இருக்கிறது.
பெண் நரிக்கு முன்னால் ஈரமான ஒரு சிறிய திட்டுத் தெரிகிறது.
அந்த பெண் நரி ஓடிப்போய் அந்த ஈரத்தில் தலைசாய்த்துப் படுத்துக் கொள்கிறது. அந்தப் பெண் நரி அதன் அடிவயிற்றை அந்த ஈரமண்ணில் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறது.
அந்தப் பெண் நரி படுத்திருக்கிற அந்த ஈரம் ஒரு யானை பெய்த சிறுநீரின் ஈரம்.
பெண் நரிக்கு சரியான பசி.
வேட்டைக்குப் போன கணவன்
இன்னும் வல்ல.
வேட்டைக்குப் போன கணவன் கட்டாயம் இரை கொண்டுக்கிட்டு வருவான் என்று அந்த பெண் நரி தன் கணவன் மேல் முழு நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறது.
அந்தப் பெண் நரி தன் இளமைக் காலத்தில் கணவனோடு சேர்ந்து வாழ்ந்த இனிமையான காதல் வாழ்க்கையை நினைத்துக் கொண்டு அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.
மருதன் இளநாகனார்
நற்றிணை 103