வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும் 5
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே

ஒரு சிறிய கிராமம்.

அந்தச் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய வீடு இருக்கிறது.

அந்தச் சிறிய வீட்டின் முற்றத்துக்கு முன்னால் ஒரு பெரிய கடல் இருக்கிறது.

அந்தக் கடல்கரையில் அழகான ஒரு நந்தவனம் இருக்கிறது. அந்த நந்தவனத்தில் விழுதுகள் உறங்குகிற தாழைமரங்கள் இருக்கின்றன. அழகான அன்னப் பறவைகள் அந்தத் தாழை மரங்களில் உட்கார்ந்திருக்கின்றன. அந்த அன்னப் பறவைகள் தங்களின் அலகால் றெக்கைகளைக் கோதிக்கொண்டிருக்கின்றன.

அந்தச் சிறிய கிராமத்தின் அந்தச் சிறிய வீட்டில் அழகான ஒரு பெண் இருக்கிறாள். அவள் ஒருத்தனைக் காதலிக்கிறாள்.அவள் காதலன் வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு தேசத்தில் இருக்கிறான்.

அந்தப் பெண்ணின் காதலனுடைய தேசத்திலும் ஒரு கடல் இருக்கிறது. அந்தக் கடலில் எழும்புகிற அலைகள் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு முன்னால் இருக்கிற அந்தப் பெரிய கடலுக்கு வருகிறது. அந்தப் பெண் அந்த அலைகளைப் பார்க்கும்போது அவள் காதலனை நேரில் பார்த்ததைப் போல் கண்டு மகிழ்ச்சி அடைகிறான்.

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தனார்
குறுந்தொகை 228