உள்ளார்கொல்லோ- தோழி!- துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் 5
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!
ஒரு சிறிய குன்றின் உச்சியில் இருக்கிறது அந்தச் சிறிய கிராமம். அந்தச் சிறிய கிராமத்தில் வேட்டுவர்கள் குடியிருக்கிறார்கள்.
அந்தச் சிறிய கிராமத்தை அடுத்து இருக்கிறது ஒரு பெரிய காடு. அந்தப் பெரிய காட்டில் ஆழமான ஒரு பெரிய கிணறு இருக்கிறது. அந்தப் பெரிய கிணத்தடியில், ஒரு தண்ணித்தொட்டி இருக்கு. அந்தத் தண்ணித்தொட்டி – நெறையாத் தண்ணி இருக்கு. அந்தத் தண்ணித்தொட்டியை ஒரு மூடி போட்டு மூடி வைச்சிருக்கு. மிருகங்களைக் கொல்ல அந்தத் தண்ணித்தொட்டிக்கு மேல் ஒரு வில்பொறி வைக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பெரிய காட்டில் வெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு பெரிய ஆண் யானை, அதன் மனைவியையும் குட்டியையும் அழைத்துக்கொண்டு தண்ணி குடிக்கிறதுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஆண் யானை அந்தத் தண்ணித்தொட்டிக்கு மேல் இருக்கிற வில்பொறியை உடைக்கிறது. அந்தத் தண்ணித்தொட்டியை மூடியிருக்கிற மூடியையும் அந்த ஆண் யானை உடைத்து நொறுக்குகிறது.
பெண் யானையும் குட்டியானையும் தண்ணி குடிச்சிக்கிட்டுருக்கு.
தன் குட்டியும் தன் மனைவியும் தண்ணி குடிக்கும்போது அந்தப் பெரிய ஆண் யானை, தன் குட்டிக்கும் தன் மனைவிக்கும் பாதுகாப்பாகக் காவல் காத்துக் கொண்டிருந்தது.
குட்டியும் மனைவியும் தண்ணி குடிச்சதுக்குப் பிறகு அந்தப் பெரிய ஆண் யானை தண்ணீர் குடிக்கிறது.
பெரிய தேவனார்
நற்றிணை 92