காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) யுலிப் மற்றும் நான் லிங்க் பாலிசிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது

ஆயுள் காப்பீட்டுக் நிறுவனங்களுக்கு பொருந்தக்கூடிய அளவிற்கு காப்பீட்டுத் துறையில் புதிய விதிகளைக் கொண்டு வருவதாக கடந்த மே மாதம் ஐ.ஆர்.டி.ஏ. ஒப்புதல் அளித்தது .

அதன் படி காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) திங்களன்று யுலிப் மற்றும் இணைக்கப்படாத பாலிசிகள் உள்ளிட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவன பாலிசிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டது.

விதிகளின்படி, போனஸுடன் இணைக்கப்படாத பாலிசிகளுக்கு குறைந்தபட்ச இறப்பு விகித தொகை 10 மடங்கிலிருந்து 7 மடங்காகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் போனஸுடன் இணைக்கப்படாத பாலிசிகளில் வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை சரண்டர் செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர் ஒரு கியாரண்டியான தொகையைப் பெறுகிறார். அதுமட்டுமின்றி ரிவைவல் காலம் இரண்டிலிருந்து ஐந்தாண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மெச்சூரிட்டி தொகையில் 25% இடையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது..

பங்குகளுடன் இணைந்த யூலிப் பாலிசிகளில் விபத்து மற்றும் கிரிட்டிக்கல் ரைடர்ஸ்களுக்கான தொகையை அதன் யூனிட்டில் இருந்து கழித்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை செலுத்தும் சிங்கிள் பாலிசிகளுக்கான லாக்-இன் காலத்தில் மாற்றங்கள் ஏதுமில்லை.

காப்பீட்டுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அறிவிப்புகளில்படி, புதிதாக அனுமதிக்கு வரும் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தால் விரைவான ஒப்புதல் குறைந்த நேரத்தில் கொடுப்பதற்க்கும். வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல பாலிசிகள் சென்றடைய வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.