அமேசான் ப்ரைம் வீடியோ போல இனி ஃப்ளிப்கார்ட் தளத்திலும் வீடியோ ஆப்..! ஃப்ளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு.வால்மார்ட் நிறுவனத்தின் இந்தியக் கிளையான ஃப்ளிப்கார்ட் தளத்தின் சார்பாக விரைவில் வீடியோ ஆப் ஒன்றும் வெளியாக உள்ளது.
தனியாக கட்டணம் செலுத்திப் பெறும் வீடியோ ஆப் வகையில் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள தனது 160 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள இந்தப் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறிப்பாகக் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களே குறிக்கோளாகவும் வைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் வணிகத்தில் தற்போது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வரவேற்பு அதிகரித்திருப்பதே ஃப்ளிப்கார்ட் வீடியோ தளம் உருவாவதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றின் மீது மட்டும் கவனம் செலுத்தப்போவதாகவும் ஃப்ளிப்கார்ட் ஒரிஜினல்ஸ் வர காலம் எடுக்கும் என்றும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
மேலும், ஃப்ளிப்கார்ட் ஆப் மூலமாகவே வீடியோக்களுக்கான தனிப்பகுதி இருக்கும் என்றும் தனியாகக் கட்டணம் செலுத்திப் பெறும் வீடியோ ஆப் வகையில் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சினிமா ஆர்வலர்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.