பிரபல பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, பொருளாதார நெருக்கடி காரணமாக 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. வாகன உற்பத்தி தொழிற்சாலைகளைத் தொடர்ந்து இப்போது பிஸ்கட் நிறுவனங்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. இந்த நிலையில்தான் பிஸ்கட் தயாரிப்பு துரையின் ஜாம்பவானான பார்லே தனது நிலையை வெளிப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டியில் 18 சதவீதம் அதிகரித்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி உயர்வால், பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இதன் காரணமாக தங்கள் பிஸ்கெட்டுகளின் விற்பனை குறைந்துள்ளதாகவும் பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற முடிவை எடுப்பது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் இதேபோன்ற பொருளாதார நெருக்கடியைப் பிரபல பிஸ்கெட் நிறுவனமான பிரிட்டானியாவும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் பல கோடி இளைஞர்கள் காத்திருக்கும் போது இது போன்ற தொடர் செய்திகள் அவர்களை மேலும் கவலை அடையச் செய்கிறது.