ஹாலாந்தில் ஜேன் கார்பெட் என்ற மருத்துவர், சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் உடலில் தனது விந்தணுவை அவர்களின் அனுமதியின்றி செலுத்தியது டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சில குழந்தைகளுக்கு கார்பெட்டின் உருவ ஒற்றுமை இருந்ததால் சந்தேகிக்கப்பட்டு அக்குழந்தைகளின் பெற்றோர்களால் இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டது. இட்டெஸ்ட்டின் மூலம் குழந்தைகளில் ஒருவரின் தந்தை கார்பெட் என்று தெரியவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு தனது 89 ஆம் வயதில் காலமான கார்பெட், மருத்துவராக பணியாற்றியபோது ஹாலந்தின் ரோட்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள அவரது மருத்துவமனையில் தனது விந்தணுவை செலுத்தி தனது நோயாளிகளை கர்ப்பமாக்கியுள்ளார். இதனால் 49 குழந்தைகள் பிறந்துள்ளது என கடந்த வெள்ளியன்று நீதிபதி டிஎன்ஏ முடிவுகளை வெளியிட்டபோது உறுதியாகியுள்ளது.