அந்நியன் திரைப்பட பாணியில் சட்டத்தை தன் கையில் எடுத்து, குற்றம் செய்த மூன்று பேரை கொலைசெய்துள்ளார் வங்காளதேசத்தை சேர்ந்த ஹெர்குலஸ் என்பவர்.
ஹெர்குலஸ் இதுவரை மூன்று கொலைகள் செய்துள்ளார். இவன் பெயரை தவிர்த்து காவல்துறையினரால் வேறு எந்த தகவலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவன் செய்த கொலைகள் காவல்துறையினரை திக்குமுக்காட செய்துள்ளது எனலாம். இதுவரை கொலைசெய்யப்பட்ட மூன்று பெரும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுப்பட்டவராகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 17, வங்காளதேசத்தில் சவர் என்ற இடத்திலிருந்து ரிப்போன்(39) என்பவர் தலையில் பபுல்லட் காயத்துடனும் கழுத்தில் “நான் தான் பெண் ஆடை தொழிலாளி பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளி. இதுதான் எனக்கான ணதண்டனை ” என்ற கடித்த வாசிப்புடன் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டனர் .
ரிபோனை தொடர்ந்து ரகீப் மற்றும் என்ற இருவரும் இரண்டு வெவ்வேறு பலாத்கார வழக்குகளின் முக்கிய குற்றவாளிகள். இவர்கள் இருவரும் ரிப்போன் போலவே கழுத்தில் கடித வாசிப்புடன் மீட்கப்பட்டனர். இதனால் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது என கூறலாம்.
யார் இந்த ஹெர்குலஸ்? அடுத்தது யார் ? என்ற கேள்வி காவல்துறையினர் போட்டு வதைக்கிறது எனலாம். சட்டத்தை தன கையில் எடுத்துள்ள ஹெர்குலஸின் பின்னணி என்ன ? எதற்காக குற்றவாளிகளை தண்டிக்கிறான் ? கொலையின் பின்னணி என்ன? என்பதனை இனி வரும் நாட்களில் காண்போம்.