முத்தமிடுவதற்குக் கூட சிணுங்கட்டம் போடுகிறாள்

சிணுங்கட்டம் அவள் பிறப்புரிமை

முத்தமிடல் என் பிறப்புரிமை!

குண்டி வலிக்க அமர்ந்திருக்கிறேன்

இன்னமும் எந்த மீனும்

சிக்கியபாடில்லை!

வறுத்தெடுத்து வைத்திருக்கிறேன்

ஒரு குண்டான் வேர்க்கடலை.

இன்னுமவள் சரக்கோடு வரவில்லை!

கிழக்கு சிவந்து சூரியன் மேலெழும்பி விட்டான்.

இன்னும் இந்த மவள் சூரிய

நமஸ்காரத்தை முடிக்கவே இல்லை!

ரயிலை எதிர்த்துச் சென்று மோதி

உயிர் விட்டவனுக்கு ஏன்

இன்னும் நடுகல் எழுப்பப்படவில்லை?

உயரப் பறக்கையில் தோன்றுகிறது

கிழமைகளை தொலைத்த நாட்டில்

எங்கு தேடினாலும் சிக்க மாட்டாய் சிவப்பியே!

மறைப்பாய்த்தானிருக்கிறது

இந்த இடமே போதுமென

இருளில் வெற்று நிலத்தில் படுத்துக் கொண்டாள்.

எந்த முன்னேற்பாட்டோடும் இந்தக் கவிதை

துவங்கவில்லை! கட்டிலின் கால்கள்

உடைந்தால் தான் உனக்கொன்று பெற்றெடுக்க இயலும்!

சீவிச் சிங்காரித்து பெட்டைக் கோழிகள்

கடற்கரைக்கு பொறுக்க வருகையில்

கிழட்டுச் சாவல்கள் நடைப்பயிற்சியிலிருந்தன!

நாய்களின் எண்ணிக்கை குறைகிறதென அரசாங்கம்

கவலை தெரிவித்தது. அதைப்பற்றிய அக்கறை ஏதுமின்றி

ஒற்றைக் கால் தூக்கி லாரி டயரில்

பிஸ்ஸடிக்கிறது விரை இழந்த நாயொன்று!

ஆகச்சிறந்த கலவியை முடித்தவன் மொட்டை

மாடியிலமர்ந்து சிகரெட் புகைத்தான்.

இன்னமும் ஏன் அவனெதிரில் இருக்கும் மலை

அவனை தற்கொலைக்கு தூண்டவில்லை?

புணர்ச்சி என்பது புனிதத்தன்மைக்கு ஒப்பானது என்றே

யோனியொன்றை வைத்திருந்தவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கூடிய சீக்கிரம் அவளைப் புணரப் போவதாய்

சபதமெடுத்தது ஒரு கரடி!

ஒதுங்கி நின்றிருக்கும் ஒற்றைப் பனை

தன்மீது வந்தமரும் காகத்திற்கோ

ஏறி வந்தமரும் அணிலுக்கோ

காத்திருப்பதாய் நினைத்திருக்கலாம்!

அழும் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கிறது

இன்னும் சற்று நேரத்தில் பால் கிடைக்குமென!

நான் புலம்புவது உனக்கு புரிந்தால் சரி.

அவரோட கவிதைகளில் அவர் தெரிவதில்லை

இருந்தும் கவிதையாக வாழ்ந்தவருக்கு

கவிதையாக சாகத் தெரியவில்லை!

முகநூலில் வாசிப்பனவற்றை எழுதியவர்கள்

கவிதைகள் என்கிறார்கள்!

கருமாந்திரங்களை கவிதைகள் எனச் சொல்லவும்

தைரியம் வேண்டும் தான்.

துக்க வீட்டுக்குச் சென்றபோது

சாப்பாட்டுப் பந்தி ஓடிக்கொண்டிருந்ததால்

சாப்பிடச் சொன்னார்கள்! மறுத்து நின்றவன்

கையில் டீ டம்ளரை கொடுத்துப் போனாள்

குண்டி பெருத்த ஒருத்தி!

நான் போன போது கிராமம் இருந்த சுவடே அழிந்திருந்தது!

புதிதாய் வந்த டைனோசர் தான் காரணமென்றார்கள்.

வேண்டுமெனவே அது அப்படிச் செய்யவில்லை என்றும்

தெரியாத்தனமாய் செய்து விட்டதென்றும் கூறினார்கள்.

எனக்குள் ஏப்பமொன்று வந்தது!

இவளைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றவன் குடும்பம்

சம்மதித்து விட்டதாய் வீட்டினுள் ஆந்தை அலற

அதன் எதிரொலி கேட்டு இவளுக்கு

வயிற்றுப் போக்கு துவங்கிற்று!