ஒரு  ஆறு.

இந்த ஆற்றாங்கரையில் ஒரு அத்திமரம் இருக்கிறது.

அந்த அத்தி மரம் பழுத்திருந்தது.

அந்த அத்திமரத்தில் இருந்து ஒருபழம் கீழே விழுந்து கிடக்கிறது.

அந்த அத்திப் பழத்தைப் பார்த்த ஒருநண்டு அந்த அத்திப்பழத்தைத் தின்பதற்காக வந்திருக்கிறது.

ஒருநண்டு ரெண்டு நன்று என்று ஒருஒரு நண்டாக வந்துவந்து ஏகப்பட்ட நண்டுகள் அந்த ஒரு அத்திப்பழத்தை மிதித்துக் கொண்டிருக்கிறது.

அத்திப்பழம் இயல்பாகவே மென்மையானது.

கீழே விழுந்து கிடக்கிற அந்த நன்றாகக் கனியப் பழுத்திருக்கிறது.

அந்த அத்திப் பழத்தை மொய்த்திருக்கிற அந்த நண்டுகள் மிதித்து மிதித்து, அந்த அத்திப்பழம் நசுங்கி ஒண்ணுக்கும் ஆகாமல் ஆகிவிட்டது.

பரணர்

குறுந்தொகை 24