மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக 5
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.

அழகான ஒரு கடல்கரை.

ஒரு கொக்கு அந்தக் கடல்கரையில் நின்றுகொண்டிருக்கிறது.

அந்தக் கொக்குக்கு நேர் எதிரில் ஒரு தாழை மரத்தின் புதர் இருக்கிறது.

அந்தப் புதரில் ஒரு நண்டு செலவு இருக்கு.

கருநண்டு, அந்த நண்டு செலவுக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. அந்த நண்டு தனக்கு முன்னால் சத்தமில்லாமல் நின்று கொண்டிருக்கிற ஒரு கொக்கைப்  பார்க்கிறது.

அந்த நண்டு அந்தக் கொக்கைப் பார்த்ததுதான் தாமதம் அது தலைதெறிக்க ஓட்டமாக ஓடுகிறது.

அந்த நண்டு ஓடிய ஓட்டம், ஒரு கயிற்றில் கெட்டிப் போட்டிருந்த இரு மாடு கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடியதைபோல் இருந்தது.

-குன்றியனார்
குறுந்தொகை 117