அது ஒரு Neolithic காலம்

தூரத்தில் மேய்ந்த
காட்டு யானை
வேண்டுமென
அழுத பிள்ளைக்கு
வேடிக்கைக் காட்ட
மண் பிசைந்து
பானை வயிற்றோடு
ஆனை முகத்தோடு
நானொரு பொம்மை
செய்து தர
பின்னொரு காலம்
அகழ்ந்தெடுத்த
நீங்கள் அதனை
முழுமுதற் கடவுள்
என்றுரைத்தீர்கள்.
***

Trickster bird கதை

நேற்றிரவின் bedtime story
டோரிமான் சோட்டாபீம் என
கார்ட்டூன் அச்சிட்ட டீசர்ட்
மூன்று மாதம் முன் கடந்த
பிறந்த நாளுக்கு
குரல் கூட இன்னும் உடையவில்லை

*
அப்பன் பார்த்துவிட்டு
மூட மறந்ததாயிருக்குமோ
இல்லை இவனே திறந்ததா
இனி ‘குழந்தை’ இல்லையா..
பெரும் திகைப்பு சூழ்ந்த புகையில்
மங்கலாய் மறைகிறது
நான் கடக்க நேரும்
மைக்ரோ நொடியில்
மடிக்கணினி முகப்பில்
அவன் டெலீட்டும்
ஒரு சூடான ஜன்னல்.