தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்,
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் 5
பெருந் தோட் செல்வத்து இவளினும்- எல்லா!-
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே; 10
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே.
தமிழ்நாட்டில் இரண்டு அரசர்கள் இருந்தார்கள். ஒரு அரசன் பெயர் நன்னன். இன்னொரு அரசன் பெயர் பிண்டன்.
ஒரு நாள் இந்த இரண்டு அரசர்களுக்கும் போர் நடந்தது. போர் முனையில் பிண்டனுடைய படை தோற்றுவிட்டது. பிண்டன் தப்பி ஓடி விட்டான்.
பிண்டனுக்கு ஏகப்பட்ட மனைவிமார்கள்.
பிண்டனிடம் ஒரு பட்டத்து யானையும் இருந்தது.
வெற்றி பெற்ற அரசன் நன்னன், பிண்டனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான். அங்கிருந்த பிண்டனின் மனைவி மார்களை வெளியே இழுத்துக்கொண்டு வந்தான். அந்தப் பெண்களின் தலையை மொட்டையடித்தான். அந்தப் பெண்களின் தலைமுடியை ஒன்று சேர்த்து அதைக் கயிறாகத் திரித்தான். அந்தக் கயிற்றைக் கொண்டு பிண்டனின் பட்டத்து யானையைக் கெட்டிப் போட்டான்.
தமிழ் மன்னன் நன்னன் பெண்களை அவமானப்படுத்தியவன்.
பரணர்
நற்றிணை 270