நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- 5
போகிய நாகப் போக்கு அருங் கவலை,
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,
கோள் நாய் கொண்ட கொள்ளைக் 10
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.

அந்தச் சின்ன ஊர்ல ஒரு அழகான பொண்ணு.

அந்தப் பெண் வீடு சின்ன வீடு.

அந்த சின்ன வீட்டில் அந்தப் பெண் பேரழகியா இருக்காள்.

அவளைப் பார்த்த, என் கண்ணுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டாள் அந்தப் பெண்.

என் கால்கள் அந்தச் சின்ன வீட்டின் முற்றத்தை விட்டு நகரவே மாண்டங்கு.

அந்தப் பேரழகி உட்கார்ந்து கொண்டிருக்கிற என் கண்களால் வேறு ஒண்ணையும் பார்க்க முடியவில்லை.

இனி இந்தப் பேரழகியோடுதான் என் வாழ்க்கை.

இவள் இல்லாத என் வாழ்க்கையை இனி என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.

நான் அவளிடம் பேசினேன்…

“எங்கூட வாரியா?”

“வா…”

“எங்கூட வா…”

“நாம ரெண்டு பேரும் ஓடிப்போய்ருவோம்…”

“நீ வராமல் நான் மட்டும் ஒத்தீல எங்க வீட்டுக்குப் போக மாட்டேன்…”

“ஒன்னயக் கூட்டிக்கிட்டுத்தான் எங்க ஊருக்கு நான் போவேன்…”

நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது…

நீ இல்லாமல் நான் வாழவே மாட்டேன்…

வா..

எங்கூட வா…

நாம ரெண்டு பேரும் ஓடிப்போயி நாம நல்லா வாழ்வோம்…

நான் ஒன்னய நல்லா வச்சிக்கிறேன்…

முருகன் வள்ளியை மகிழ்ச்சியா வச்சிக்கிட்ட மாதிரி நான் ஒன்னய மகிழ்ச்சியா வச்சிக்கிறேன்…

வள்ளி, முருகன் கூட மகிழ்ச்சியா ஓடிப்போன மாதிரி நீயும் எங்கூட மகிழ்ச்சியோடு வா…

வள்ளி..

வா…

வா… எங்கூட…

வள்ளியின் கையை நான் பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

என் கையை வள்ளி பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

அந்த இரவில் அந்த இருட்டான இருட்டில் நாங்க ரெண்டு பேரும் அந்தப் பெரிய பாலைவனத்தில் நடந்து நாங்க எங்க ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

அம்மள்ளனார்
நற்றிணை 82