ஒருபொருள்கவிதைகள்–7  தொகுப்பு : செல்வராஜ் ஜெகதீசன் 

வரைவதைநிறுத்து
மனோமோகன்

சுற்றுவட்டமதில்சுவரோடு
கறித்துண்டின்நிறத்தில்…
ஒருகட்டிடம்வரைந்திருக்கிறாய்
அதன்வாசல்தூணில்பிணைத்து
முழங்கைஎலும்பின்நிறத்தில்
நிக்கல்முலாம்பூசப்பட்ட
இரும்புச்சங்கிலிஒன்றும்
வரைந்திருக்கிறாய்
அதுகூடப்பரவாயில்லை
பிஸ்கட்டின்வண்ணத்தில்
ஒருகழுத்துப்பட்டையும்
வரைந்துவைத்திருக்கிறாய்
தயவுசெய்து
வரைவதைநிறுத்து
நான்வரையச்சொன்ன
நாய்க்குட்டிஇதுவல்ல.

O

வளர்ப்புமிருகம்

சுகுமாரன்

தளர்ந்து
உயிர்பிரியத்தவிக்கும்உடம்பாய்க்குறுகி
எங்கோபார்த்துக்கொண்டிருந்த
என்கால்களைமுகர்ந்ததுஅது

அதன்கண்களில்நிராதரவு
இரங்கி

சிலசொற்களைஎறிந்தேன்
பசிநீங்கியும்போகாமல்
என்நிழலைத்தொடர்ந்ததுஅது.

நாளடைவில்கால்முகம்ரோமம்என
உறுப்புகள்மீண்டனஅதற்கு
பற்கள்நீண்டன
நகங்கள்வளர்ந்தன
கண்களில்குரோதம்அடர்ந்தது
அதற்குப்பயந்து
நண்பர்கள்வராமல்போனார்கள்
குழந்தைகள்ஒளிந்துகொண்டார்கள்

அதுவளர்ந்து
என்னைவிடப்பெரிதாச்சு
அதன்பற்களில்வெறிதுடித்தது
எனினும்

என்னைஒன்றும்செய்யாதுஎன்றிருந்தேன்

அதன்முனகலும்உறுமலும்
என்அமைதியைக்கலைத்தன
அதன்ரோமங்கள்உதிர்ந்தும்
மூத்திரம்தேங்கியும்
மலம்குவிந்தும்
அறைநாற்றமடிக்கத்தொடங்கியது

தொல்லைதாளாமல்

நம்பிக்கைகளைக்கோர்த்துச்சங்கிலியாக்கிக்
கட்டிவைத்தேன்
உலாவப்போகையில்சங்கிலிபுரளக்
கூடவந்தது

பிறகு
இழுத்துப்போகவலுவற்றஎன்னை
இழுத்துப்போகத்தொடங்கியது
சங்கிலிச்சுருளில்மூச்சுத்திணற
சிக்கிக்கொண்டேன்நான்.
விடுபடத்தவிப்பதேவிதியாச்சு

ஒருநாள்

விசைகுறைந்தசங்கிலியைக்கைஉணர
அதுதொலைந்ததென்றுமகிழ்ந்தேன்

எனினும்
புலனாகாதஎங்கோ
அகற்றமுடியாதசங்கிலியின்மறுமுனையில்
இருக்கக்கூடும்அதுவென்ற
பயம்பின்புநிரந்தரமாச்சு.

 

o

 

விதி

லஷ்மிமணிவண்ணன்

எனக்குத்தெரிந்த

நான்கைந்துதெருநாய்கள்

எப்போதுகண்டாலும்

பேருந்துகளைஅலற

விரட்டிக்களைத்து

வாயில்நீர்ஒழுக்கும்

எனக்கும்அதுபோலவே

ஒருநாளேனும்திவங்கதிவங்க

ஒருபேருந்தையேனும்

விரட்டிக்குரைக்கணும்

என்விதியோ

நான்பேருந்துக்குள்

போகவேண்டியிருக்கிறது.

 

O

கலாப்ரியா  கவிதை

எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு
கவிதை தரப்பார்க்கிறது.

O

 

வாழ்வின்சாம்பல்

பாலைநிலவன்

இல்லத்திற்குத்துறவிவந்திருந்தார்

வாழ்வின்புதிர்பற்றிக்கேட்டேன்

பவ்யமானநகைப்போடு

நாயின்மண்டையோட்டை

அறையில்வைத்துவிட்டுப்போய்விட்டார்

அதைசாம்பல்கிண்ணமாக்கியபின்சொல்கிறேன்

வாழ்வுநாயின்மண்டையோடாகஇருக்கிறது

நிரப்புவதுதான்

வேட்கையாயிருக்கிறது.

 

O

 

சகலமும்

இசை

 

சகலமும் கலைந்து சரிய

அழுதழுதடங்கியவன்

தன்னருகே வந்து

குழைந்த நாய்க்குட்டியை

மெல்லமெல்ல தடவிக் கொடுத்தான்

அது அவன்

உடலாகவும் இருந்தது.