வசந்தத்தைத் தீண்டியபடி

கலங்கரை விளக்கத்தில்  விளக்குடன் காத்திருந்தேன்

இலைகளை குவித்து  தீமூட்டி காத்திருந்தேன்

குளிரில் ஏரிதழலுடன் காத்திருந்தேன்.

 

நான் காத்திருப்பதில் மனம் கசிந்து

கடலே உள்ளே சென்று கண்டறிந்துவிட்டதோ

 

ஆழிப்பேரலையாய் பொங்கி

நிலத்தைத் சூழ்ந்தபடி

உன்னை என்னிடம் சேர்த்துவிட்டது..

வசந்தத்தை தீண்டியபடி

வசந்தத்தில் திளைத்து இருந்தேன்

 

அன்பின் பந்தயத்தில்

 

அருவியாய் உன்னைத் தழுவி கொண்டே இருப்பேன் என்றாய்

நீ கடலைச் சேர வேண்டும் என்பதே உன் பயணம்  என்றேன்

 

அருவியோ நதியோ இந்தக் கோப்பையில் தளும்பும் தேனீரோ

அன்பு என்னும் பந்தயத்தில்  வெற்றி என்னுடையதே..

முன்பு தழுவியபடி ஓடிக்கொண்டு இருந்தாய்..

இப்போது என் அணைப்பின் சிறையில் மட்டுமே வசிக்கப்போகிறாய்.