சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும் 5
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
எங்கள் தொழுவில் எங்கள் காளைமாடு கெட்டிக்கெடக்கு.
எங்கள் காளைமாட்டின் அழகான கழுத்தில் ஒருநல்ல – ஒரு சிறிய மணி கெட்டியிருக்கிறோம்.
மாட்டு ஈக்கள் இரைச்சல் போட்டுக்கொண்டு பறந்து பறந்து எங்கள் காளைமாட்டைக் கடித்துக் கொண்டிருக்கிறது.
மாட்டு ஈக்களின் கடியைத் தாங்கமுடியாமல் எங்கள் காளைமாடு தலையை வேகமாக அசைத்து அசைத்து அந்த ஈக்களை விரட்டுகிறது.
எங்கள் காளைமாடு தலையை அசைக்கிறபோது எங்கள் காளைமாட்டின் எழுத்து மணி மெல்லிய இசையை எழுப்புகிறது.
எங்கள் காளைமாட்டின் இந்த மெல்லிய மணி ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது.
நான் உறக்கம்வராமல் படுத்திருக்கிறேன்.
ஊர் உறங்குகிறது.
பனி பெய்துகொண்டிருக்கிறது.
குளிர்ந்த காற்றுவாடையை அள்ளிக்கொண்டு வருகிறது.
இது நடுச்சாமம்.
நான் இப்போதுதான் திருமணம் ஆனவள்.
என் கணவர் என்னை விட்டுவிட்டு அவர்மட்டும் தனியாக வெளிநாடு போய் இருக்கிறார்.
நான் அழுது அழுது என் கண்கள் சிவந்துவிட்டன. என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.
-வெண் கொற்றனார்
குறுந்தொகை 86