ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்      5
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.

ஒரு இளம் பெண்.

அவளுக்கு ஒரு தோழி இருக்கிறாள்.

அவள் தோழிக்கு ஒரு காதலன் இருக்கிறான்.

அந்த இளம்பெண் அவள் தோழியின் காதலனிடம் ரகசியமாய் பேசிக் கொண்டிருக்கிறாள்.

அந்தப் பெண் அவனிடம் சொல்கிறாள்.

“நாளைக்கு நான் எங்கள் ஊர் காட்டாற்றுக்குப் போகிறேன்”

“எங்கள் ஊர் காட்டாறு உனக்குத் தெரியும். நீ பலமுறை எங்கள் ஊர் காட்டாற்றுக்கு வந்திருக்கிறாய்.”

“அந்தக் காட்டாற்றுக்குப் பக்கத்தில் ஒரு ஊரணி இருக்கிறது.அந்த ஊரணிக்குப் பக்கத்திலேயே ஒரு நந்தவனமும் இருக்கிறது.

“அந்தக் காட்டாற்றிலும் அந்த ஊரணியிலும் நாரைகள்தான் மீனுக்காக நின்றுகொண்டிருக்கிறது.”

“அந்த நாரைகளைத் தவிர அந்தப் பகுதியில் எங்குமே ஆள் நடமாட்டம் இல்லை.”

“நான் தலையில் தேய்த்துக் குளிக்கிறதுக்குக் களிமண் அள்ளப் போகிறேன். என் தோழியும் என்கூட வருகிறாள்.”

“நாளைக்கு நீ வா.”

“ஆள் இல்லாத அந்த நந்தவனத்தில் நீங்கள் இரண்டு பேரும் ரகசியமாகச் சந்திக்கலாம்.”

-மாதிரத்தனார்
குறுந்தொகை 113