மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு 5
வாரல் வாழிய ரையவெந் தெருவே.
ஒரு பெரிய வீடு.
அந்தப் பெரிய வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய கொட்டாரம் இருக்கிறது. அந்தக் கொட்டாரத்தில் ஒரு தாய்க்கோழியும் அதன் குஞ்சுகளும் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அது ஒரு மாலை நேரம்.
ஒரு காட்டுப் பூனை அந்தப் பெரிய கொட்டாரத்தைச் சுற்றி உள்ள ஒரு வேலியில் ஒரு மூலையில் அது ஒளிந்து கொண்டிருக்கிறது.
அந்தக் காட்டுப்பூனை அந்தக் கோழிக்குஞ்சுகளை வேட்டையாடுவதற்காக வந்திருக்கிறது.
தாய்க்கோழி அந்தக் காட்டுப்பூனையைப் பார்த்துவிட்டது. அதன் குலை பயந்து நடுங்குகிறது.
காட்டுப் பூனையைப் பார்த்துப் பயந்துபோன அந்தத் தாய்க்கோழி தன் குஞ்சுகளைத் தன்னிடம் வேகமாக ஓடிவரும்படி கூவிக்கூவிக் கூப்பிடுகிறது.
-ஏக்கூர் மாசாத்தியார்
குறுந்தொகை 139