யாவதும் அறிகிலர் கழறு வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தே
யாமைப் பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே. 5
ஒரு காடு, அந்தக்காட்டில் ஒரு மரம். அந்த மரத்தில் ஒரு குருவிக்கூடு. அந்தக் குருவிக்கூட்டில் ஒரு முட்டை இருக்கிறது.
அந்த முட்டைக்குத் தாய் இல்லை.
தாய், முட்டை இட்டதும் செத்துவிட்டது.
தாய்க்குருவி செத்துவிட்டதால் அடைகாக்காத அந்த முட்டை ‘கரு’ வளராமல் ‘கரு’ கலங்கி தாய் இல்லாத அந்த முட்டை கெட்டுக் கூமுட்டையாகி விட்டது.
-கிளி மங்கலங் கிழார்
குறுந்தொகை 152