குன்றக் கூகை குழறினும் முன்றிற்
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
அஞ்சுமன் அளித்தெ னெஞ்ச மினியே
ஆரிருட் கங்குல் அவர்வயிற்
சாரல் நீளிடைச் செலவா னாதே. 5
எங்கள் ஊரில் ஒரு மலை இருக்கிறது. அந்த மலையில் ஒரு பெரிய ஆந்தை இருக்கிறது. அந்த ஆந்தை கூவும்போது எனக்குப் பயமாருக்கும்.
எங்கள் முற்றத்தில் ஒரு பலாமரம் இருக்கிறது. அந்தப் பலாமரத்தில் ஒரு பெரிய கிளையில் ஒரு ஆண் குரங்கு இருக்கிறது. அந்த ஆண்குரங்கு அந்தக் கிளையில் இருந்து இன்னொரு கிளைக்குத் தாவிக்குதிக்கும்போதும் எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது.
நான் ஒரு பாலைவனத்தில் நடந்து போய்க்கொண்டிருக்கிறேன். என் காதலனோடு எனக்கு எந்தப் பயமும் இல்லை.
–கபிலர்
குறுந்தொகை 153