குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.
ஒரு இளம்பெண் அவளுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது. அவள் கணவன் வீட்டில் இருக்கிறாள்.
ஒரு அதிகாலை நேரம்.
சேவல் கூவுகிறது.
சேவல் கூவுகிற சத்தத்தை அந்தப்பெண் கேட்கிறாள். சேவல் கூவுகிற சத்தத்தைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் நெஞ்சு அவளுக்கு வெடித்துவிடும்போல் இருக்கிறது.
பொழுது விடிந்துகொண்டு வருகிறது.
விடிந்து கொண்டு வருகிற அழகான அந்தக் காலைப் பொழுதை அவள் பார்க்கிறாள். அந்த இளம் காலைப் பொழுது அவளுக்கு வாள் மாதிரித் தெரிகிறது. அந்தப்பெண் பொழுதைப் பார்த்துப் பயப்படுகிறாள்.
பொழுது விடிஞ்சதும் அந்தப் பெண்ணை அவன் கணவனிடம் இருந்து பிரித்துவிடுவார்கள்.
அந்தப் பெண் அவள் கணவனிடம் இருந்து பிரிந்து தனியாக இருக்க விரும்பவில்லை.
பொழுது விடியக்கூடாது என்று அவள் நினைக்கிறாள்.
அந்தப் பெண் மாதவிலக்காகியிருக்கிறாள்.
அள்ளூர் நன்முல்லையார்
குறுந்தொகை 157