யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.

 

எங்கள் ஊருக்குக் கிழக்கே ஒரு பூங்கா இருக்கிறது.

பூங்காவுக்குக் கிழக்கே ஒரு கடல் இருக்கிறது.

கடல்கரையில் தாழை மரங்கள் பூத்து மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. கொக்குகள் மீன்களுக்காகக்கூட்டம்கூட்டமாக நின்று கொண்டிருக்கின்றன. கடல் அலைகள்  தாழை மரங்களின் மேல் இடைவிடாமல் மோதிக் கொண்டிருக்கிறது. அலைகள் மோத மோத தாழை மரங்கள் அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது.

“கடலே”

“இந்த நடுச்சாமத்தில் உன்குரல் கேட்டுக் கொண்டிருக்கிறதே ஏன்?”

“நீ யாரால் இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்?”

“என் காதலன் என்னைக் கைவிட்டதால் நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..”

“கடலே… நீயுமா?”

அம்மூவனார்
குறுந்தொகை 163