தஞ்சாவூரில் தூரத்து சொந்தத்தைச் சேர்ந்த மாமா ஒருவர் இறந்ததால் அம்மா, அப்பா இருவரும் மாணிக்கத்தையும் தங்கச்சி பாப்பாவையும், சரஸு அக்கா வீட்டில் விட்டுச்செல்வதாக முடிவெடுத்தனர். ஆனால் மாணிக்கம் ‘அவர்கள் ஏன் என்னை தஞ்சாவூருக்குக் கூட்டிச் செல்லவில்லை என்ற கவலையைவிட’ சரஸ்வதி அக்கா வீட்டில் விட்டுச்செல்வதை நினைத்து சந்தோஷமாக இருந்தான்.

சரஸ்வதி அக்கா, அந்தத் தெருவிலேயே உயரமான பெண், ஒருமாதிரி திராவிட நிறம். கிட்டத்தட்ட சொர்க்கம் நாடகத்துல வர மெளனிக்கா மாதிரி இருப்பாள். அந்தத் தெருவழி செல்பவர்கள் பலரும் அவள் வீட்டை ஒரு நொடி ஏறெடுத்து பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள். அவளின் உடம்பு வனப்பு அப்படி. அவள் சேலை கட்டியிருக்கும் அழகோ அழகுதான். முந்தானையிலிருந்து தொடங்கி மீண்டும் முந்தானையிலேயே எடுத்துச் சொருகியிருப்பாள். கீழே கெண்டை கால்கள் தெரியும். கூடவே ‘ஜங் ஜங்’ என்ற கொலுசு சத்தம் வேறு. மாணிக்கத்தைப் பார்த்தால் சிரிப்பாள், கையில் ஏதாவது திண்பண்டங்கள் வைத்திருந்தால் தலையைத்தடவி கொடுத்துவிட்டுதான் செல்வாள். அவளுக்குத் திருமணமாகி ஓரிரு மாதங்கள்தான் இருக்கும். அவளது கணவன், ஒருமாதிரி வெளிரிய நிறமாக இருந்தான். சரஸ்வதியின் நிறத்திற்கு அருகில்கூட அவனது நிறம் வரமுடியாது.  இருவரையும் தூரத்திலிருந்து யாராவது பார்த்தால் ஒருமாதிரி பொருந்தாத ஜோடி போல தெரிவார்கள். மேலும் வெளியூர் வாசிகள் இவர்களைப்பற்றி கேட்டால், ‘ஒண்ணு கட்ட ஒண்ணு நெட்ட’ என்றுதான் தெருவில் இருப்பவர்களால் அடையாளப்படுத்தப்படுவார்கள். மாணிக்கத்திற்கு சரஸ்வதியின் கணவன் பெயர் தெரிந்திருக்கவில்லை. தெருவில் இருப்பவர்கள், சரஸ்வதிக்கு கல்யாணமான புதிதில் ஓரிரு முறை அவளது கணவனை, கட்ட பையன், கட்டயன் என்று கூப்பிட்டு வசமாக சரஸ்வதியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.  அவனது கணவன் பெயர் அசோக் குமாராம், அப்படித்தான் கூப்பிட வேண்டும் என்று தெருவே கேட்கும்படி ஒருமுறை கத்தினாள். ஆனால் மாணிக்கம் அவனது பெயரைக் ‘கட்டயன்’ என்றே மனதில் பதித்திருந்தான்.

“பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ” என்று சட்டை பாக்கெட்டில் அப்பா திணித்திருந்த ஐந்து ரூபாயைக்கூட மறந்து மாணிக்கம், சரஸ்வதி அக்கா நினைப்பாகவே இருந்தான். விடியற்காலையில் சென்ற அவர்கள் மாலை வந்துவிடுவதாக சரஸ்வதி அக்காவிடம் கூறியிருந்தார்கள். மாணிக்கத்தின் நண்பர்கள் இரண்டு மூன்றுமுறை விளையாட அழைத்தும் அவன் சரஸ்வதி அக்கா வீட்டைவிட்டு நகரவே இல்லை. தங்கச்சி பாப்பா சுகந்திக்கு மட்டும் அம்மா, அப்பா நினைப்பாகவே இருந்தது. மணி 7 ஆகியும் அவர்கள் இன்னும் வரவில்லை. சரஸ்வதி அக்கா அப்போது சன் டிவியில் மெட்டி ஒலி நாடகத்தை வைத்திருக்காவிட்டால் ‘அம்மா எங்கே…’ என்று சுகந்தி அழுதிருப்பாள். நாடகம் முடிந்து சுகந்தி தூங்கிபோயிருந்தாள்…

‘பக்கத்துல மாவு அரைச்சிட்டு வந்துர்றேன்னு…’ மாணிக்கத்தின் தலையைத் தடவிவிட்டுப்போன சரஸ்வதி அக்காவும் வந்தாயிற்று. மாணிக்கத்திற்குக் காலையில் சாப்பிட்ட தோசை ஜீரணமாகி பசி எடுத்திருந்தது. ஆனால் அவனுக்கு நண்பர்களோ, பசியோ, அம்மா, அப்பாவோ சுத்தமாக சிந்தனையிலேயே இல்லை, அவன் முதன்முதலாக சரஸ்வதி அக்கா வீட்டில் தூங்கப்போவதை நினைத்து உருகிக் கொண்டிருந்தான்.

சரஸ்வதி அக்காவைப் பெரும்பாலும் சரஸ்வதி என்று கூப்பிடுபவர்களைவிட சரஸு என்று கூப்பிடுபவரே அதிகம். மாணிக்கம் சில சமயம் யோசிப்பதுண்டு சரஸ்வதி என்ற பெயரிலிருந்த தெய்வதம் சரஸு என்று கூப்பிடும்போது மொத்தமாக அவளது உடம்பிற்கு வந்திறங்கி விடுகிறதென்று.

திருமணமானதிலிருந்துதான் அந்தத் தெருவில் சரஸ்வதி அக்கா பற்றிய பேச்சுகள் கொஞ்ச கொஞ்சமாக குறையத் தொடங்கியதையும் மாணிக்கம் கவனித்திருந்தான். என்ன ஆயிற்று இவர்களுக்கு ஒரு பெண் திருமணமானால் அவ்வளவுதானா? அவளது அழுகு மொத்தமும் இன்னொருத்தனுக்குச் சொந்தமா? இனிமேல் அவளை யாரும் வைத்தகண் வாங்காமல் பார்க்க மாட்டார்களா? மாணிக்கத்திற்குத் தெருவாசிகளின் நடவடிக்கைகளைக் கண்டு விசித்திரமாக இருந்தது.  இந்த ஓரிரு மாதங்களிலும் சரஸ்வதி, சரஸுவாகவே மாணிக்கம் கண்களுக்குத் தெரிந்தாள். தெருவில் வரும்போது போகும்போதும், அம்மாவிடம் ஏதாவது வாங்க விட்டிற்கு வரும்போதும் சரஸ்வதி அக்காவின் முகத்தையும் கால்களையும் வைத்தக்கண் வாங்காமல் பார்த்திருக்கிறான். தினமொரு வண்ண சேலையாக அவள் காட்சியளிக்கும் அழகை கண்டு, மாணிக்கம் முடிவெடுத்திருந்தான்… ‘கட்டுனா இதுமாதிரி ஒரு பொண்ணதான் பெரியவனான கட்டணும்’ என்று. மாணிக்கம் அவசியப்படும்போது மட்டும் சரஸ்வதியை ‘அக்கா’ என்று கூப்பிடுவதுண்டு.

இந்த இரவில் இந்த சிறிய வீட்டில் தன்னை எங்கே படுக்கச் சொல்வாள், தனக்கும் அவளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கும். அவனது கணவன் எங்கே படுத்துறங்குவான். கூட சுகந்தி வேறு. உடமெல்லாம் எதோ செய்கிறதே… தலைவேறு வலிக்கிறதே… கொஞ்சம் குழப்பாக இருப்பதுபோல் தெரிந்தான் மாணிக்கம்.

காலையிலிருந்து ஒரு இடத்தில்கூட உட்காராமல் சரஸ்வதி அக்கா எவ்வளவு கஷ்டப்படுகிறாள். அவளுக்கு உதவி செய்யத்தான் பாவம் யாரும் இல்லை என்று நினைத்தான். இரண்டாகப் பிரித்த வீட்டில் ஒரு ஓரமாக நின்று சமைத்துக்கொண்டிருந்தாள் சரஸ்வதி. அவளது வியர்வை முதுகு தண்டின் வழி இறங்கி இடுப்பில் தஞ்சமடைந்ததை மாணிக்கம் பார்க்காமல் இல்லை.  ‘அப்பா, என்ன உடம்பு இது. மசமசன்னு எப்படி இருக்கு. ஏன் அவளுக்கு அக்குளுக்கு அருகில் ஈரமாக இருக்கிறது.’ என்று ஓரக்கண்ணால் அவளது உடம்பை ஊடுறுவிக்கொண்டே சமையற்கட்டை நெருங்கினான் மாணிக்கம்.

“வாடா வந்து ரெண்டு இட்லி சாப்பிட்டு படு.. உங்க அம்மா அப்பா நாளைக்குதான் வருவாங்கபோல, அவ தூங்கிட்டாளா?  அவளப்போய் எழுப்பு” என்று இடுப்பில் வழிந்த வியர்வையைத் தனது சேலையால் துடைத்துவிட்டபடியே கூறினாள் சரஸ்வதி.

“ஆமா, தூங்கிட்டா, எங்க அம்மா எங்க வீட்டுச் சாவி கொடுத்தாங்களா?”  என்றான் மாணிக்கம்.

“கொடுத்தாங்கடா எதுக்குக் கேக்குற…” என்று முந்தானையில் சொருகியிருந்த சாவியை எடுத்து நீட்டினாள்.

“இல்ல. எங்க வீட்டுல டேபிள் ஃபேன் இருக்கு… உங்களுக்கு எப்படி வியர்க்கிறது பாருங்க… நா போயி ஃபேன் எடுத்துட்டு வரேன், நீங்க அதுக்குள்ள பாப்பவ எழுப்புங்க” என்று சரஸ்வதி கையிலிருந்த சாவியைப் பிடுங்கிக்கொண்டு குடுகுடுவென்று ஓடினான் மாணிக்கம்.

“ம்ம்ம்… அவசரத்தப் பாரு” என்று மெல்லிசாக சிரித்தாள் சரஸ்வதி.

மாணிக்கம் வீட்டைத் துறந்து ஃபேனை எடுத்து வந்தான்.

“என்னடா இதுக்கு இவ்வளவு நேரமா?”

“இல்ல… பூட்டத்தொறக்க ஹைட் எட்டல… எப்படியோ தொறந்துட்டன்.. அதான் லேட் ஆயிடுச்சு”

சுகந்தி தூக்கக் கலக்கத்தில் எழுந்து இரண்டு இட்லியை சாப்பிட்டுவிட்டு அதே இடத்தில் படுத்துக்கொண்டாள். மணி பத்தாகியும் சரஸ்வதியின் கணவன் அசோக் குமார் இன்னும் வீடுவந்து சேரவில்லை.

கதவிடுக்கில் சாய்த்துவைத்திருந்த பாயை எடுத்து விரித்தாள் சரவஸ்தி, மாணிக்கத்திற்குப் படபடவென்று இதயம் அடித்துக்கொண்டது.

“நீயும் சுகந்தியும் இங்க படுங்க… நான் இங்க படுத்துகுறேன்ன்னு” சொல்லி இரண்டு மீட்டர் தொலைவில் ஒரு இடத்தைக் காண்பித்தாள்.

“அக்கா…. நா வேனா இங்க படுத்துக்கவா…?” (அக்கா என்ற சொல், அவள் காதில் விழுந்திருக்க வாய்பில்லை) என்று சரஸ்வதி படுத்துறங்குவதாகச் சொன்ன இடத்திற்கு நேராகக் கைக் காட்டினான்.

“யேண்டா… “

“இல்ல… எனக்கு நைட்டு ஆனா கொஞ்சம் பயம். எங்க அம்மாவ கட்டிப்புடிச்சுத்தான் தூங்குவன் அதனால, நா உங்க பக்கத்துல படுத்துக்குறன்”

பல் தெரியாமல் நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே “சரி டா” என்றாள்.

மாணிக்கத்திற்கு ஒரே வெக்கமாக இருந்தது. சுகந்தியைப் பக்கத்தில் படுக்கவைத்துவிட்டு மாணிக்கமும் படுத்துக்கொண்டான்.

இந்த இரவு மட்டும் அறிவியல் பாடத்தில் வருவதுபோல பல ஒளி ஆண்டுகள் நீளமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தான் மாணிக்கம். விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தாலும், வீட்டிற்கு நேராக இருக்கும் தெருவிளக்கின் ஒளி வீட்டிற்குள் விழுந்திருந்தது.

சரஸ்வதி புரண்டு படுத்தாள். அவளது சேலைகள் சுருங்கி கசங்கின. மாணிக்கத்திற்குத் தூக்கம் வருவதாக இல்லை. எப்படி வரும்.

“ஏண்டா தூக்கம் வரலையா”

“இல்… ல…”

“கண்ண மூடு… தூக்கம் வரும்”

“ம்… சரி…”

மாணிக்கம் கண்ணை மூடியவுடன் ஒருவித நறுமணத்தை உணர்ந்தான். அது… அவள் முந்தானையில் சொருகியிருந்த சாவியை முகர்ந்தபோது வந்த அதே வாசனை. இந்த வாசனையினூடே வாந்தி நாற்றமும் அடித்தது. அந்த நாற்றம் கட்டயனுக்குச் சொந்தமானது.

திறந்திருந்த கதவைத் தட்டாமல் நுழைந்தது கட்டயனின் நிழல். தெருவிளக்கின் ஒளி திடீரென்று மங்கியதை உணர்ந்தெழுந்தாள் சரஸ்வதி.

‘ராப்பகலாக உழைப்பது, குடிப்பது, வாந்தியெடுப்பது சரஸ்வதி போன்ற அழகிய மனைவியுடன் உறங்குவது என்று கட்டயனுக்கு செம வாழ்க்கை டா..’ என்று மாணிக்கம் நினைப்பதுண்டு. ‘இப்போது வந்துவிட்டான் கட்டயன். இந்த ஒரு இரவு, இவன் வராமல் இருந்தால்தான் என்ன? ச்சே…. எதுக்கு இப்ப வந்தான்’ என்று பல்லைக்கடித்துக்கொண்டு உறங்குவதுபோல நடித்துக்கொண்டிருந்தான் மாணிக்கம்.

“ம்ம்ம்… இட்லி சாப்பிடுறியா…” என்று அசோக் குமாரிடம் கேட்டாள் சரஸ்வதி.

“வேணாம்… நீ சப்பிட்டியா” என்றான் அசோக் குமார்.

“ம்ம்ம் சாப்டன்.. இப்படி வந்து ஓரமா படு… பக்கத்துவீட்டு பசங்க அங்க படுத்துருக்கு…”

“ம்ம்ம்…” என்று சொல்லிவிட்டு டேபிள் ஃபேனை உற்றுப்பார்த்தான்…

“அதுவா…? அதும் பக்கத்து வீட்டோடதுதான்…” என்றாள் சரஸ்வதி.

ஃபேனை திருப்பி சரஸ்வதி பக்கம் வைத்துவிட்டு படுத்தான் அசோக் குமார். இருவரும் உறங்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அசோக் குமாரிடமிருந்து குறட்டை சத்தம் கேட்கத் தொடங்கியது. தனது கையை மெதுவாக சரஸுவைத் தொடுவதற்காக (புரண்டு தூக்கத்தில் தெரியாமல் படுவதுபோல்) நீட்டினான் மாணிக்கம். கிட்டத்தட்ட தொட்டுவிட்டது. அவள் மெதுவாக கையை எடுத்து மாணிக்கத்தின் நெஞ்சின் மேல் வைத்துவிட்டு புற முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

பின்பு சரஸ்வதி மெல்ல தனது கையை அசோக் குமார்மீது போட்டாள். சில பல ஒலி சமிஞ்கைகள் மட்டும் கேட்டது. இந்த இரவில் இந்த சிறிய அறையில் என்ன நடக்கிறது என்றே மாணிக்கத்தால் சரியாக யூகிக்க முடியாமல் இருந்தது. ஒரு மீட்டர் தொலைவில் தெரிவதைக்கூட இந்த இருட்டு மறைத்துவிடுகிறதே என்று இருட்டின்மீது கோபப்பட்டான்.

ஏன் இப்படி ஒரு ஸ்பரிச ஒட்டுதலுக்கான ஏக்கமாக சரஸ்வதியின் உடம்பு இருக்கிறது. ஏன்? என் கையைத் தூக்கி என் நெஞ்சுக்கு அருகிலேயே வைக்கிறாள். ஏன் என்னால் அவளைத் தொட்டுக்கொண்டே தூங்க முடியவில்லை. என்று பல யோசனைகளினூடே மீண்டும் சரஸ்வதியை நெருங்க அவள் பக்கம் திரும்பினான்.

மாணிக்கத்தின் கண்கள் சிரமபட்டு இருட்டைத் துலாவின. சரஸ்வதி, கட்டயனை ஒரு பொம்பைபோல தூக்கித் தனது தொடைகளுக்கு நடுவில் வைத்திருந்தது மட்டும் தெரிந்தது. மாணிக்கத்திற்குத் தன்னுடைய முதல் ஸ்கலிதம் அவன் கைப் படமாலே இனிதே வெளியேறியது.

காலையில் மாணிக்கம் அவன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள்போல… சுகந்தி, கையில் பல்விலக்கும் பிரஷை எடுத்துவந்து மாணிகத்திடம் நீட்டினாள். பிரஷை வாங்கிக்கொண்டு வெளியே வந்து சரஸ்வதி அக்கா வீட்டைப் பார்த்தான். வாசல் பெருக்கி குப்பைகளை ஓரங்கட்டிக்கொண்டிருந்தாள் சரஸூ.

“என்னடா நல்ல தூக்கமா?” என்று மாணிக்கத்தைப் பார்த்து கேட்டாள்.

“ஆமா… அக்கா…” என்று தெருவுக்கே கேட்பதுபோல உரக்கச் சொன்னான் மாணிக்கம்.

மாணிக்கத்தின் முகத்தெளிவிலும் உடலசைவுகளிலும் மாற்றம் தெரிந்ததை சரஸ்வதி அக்கா மட்டும் அறிந்திருந்தாள். என்ன ஆனாது என்று தெரியவில்லை. அன்றிலிருந்து சரஸ்வதி அக்காவிடம் பேசுவதை மாணிக்கம் நிறுத்தியிருந்தான்.

அவள் வீட்டிற்குக்குக்கூட இப்போதெல்லாம் அவன் செல்வதில்லை. அம்மா ஏதாவது சரஸ்வதி அக்காவிடம் வாங்கிவரச் சொன்னால்கூட சுகந்தியைத்தான் இப்போதெல்லாம் போகச் சொல்கிறான்.

மாணிக்கம் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்காக வெளியூரிலிருக்கும் ‘ஆண்கள் மேல்நிலைப்பள்ளி’யில் சேர்ந்தான். வரிசையாக சரஸ்வதி அக்காவுக்குக் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் சரஸ்வதி அக்கா நினைப்பே அவனுக்கு வருவதில்லை. அவ்வப்போது விழா காலங்களில் வீட்டிற்கு வரும்போது சரஸ்வதி அக்கா பற்றியப் பேச்சுகள் அடிபடும். அதைக் காதில் போட்டுகொண்டே அவனது வேலைகளைக் கவனிப்பான்.

அப்படி அவன் கேட்டுகொண்டவை, சரஸ்வதி அக்காவிற்கு மூன்று குழந்தைகளாம்… முதல் இரண்டும் ஆண்கள், கடைசியாக பெண்ணாம். கணவன், அசோக்குமார் இப்போதெல்லாம் குடிப்பதில்லையாம். ஒருமுறை குடித்துவிட்டு 5000 ரூபாய் சம்பள பணத்தைத் தொலைத்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான். சரஸ்வதி அக்கா கடுப்பாகி செம அடி கொடுத்திருக்கிறாள். அன்றிலிருந்து அவன் குடியை விட்டிருக்கிறான். இப்போதெல்லாம் நன்றாக சம்பாரிக்கிறான் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்கபோது  ‘கட்டயன் உண்மையிலேயே சாமர்த்தியசாலிதான்’ என்று மாணிக்கம் தனக்குள்ளே சிரித்துக்கொள்வான்.

வருடங்கள் செல்லச் செல்ல பள்ளியில் மாணவர்களுக்கிடையே சகஜமாக மிக வெளிப்படையாகவே சில விஷயங்களைப் பேசிக்கொண்டார்கள். மாணவர்களின் அதிதீவிர கவனிப்பு பாடத்திலிருந்ததைவிட யார் யார் எப்படி சுயமைதுனம் செய்வீர்கள், எந்த இடத்தில் செய்வீர்கள், யாரை நினைத்துச் செய்வீர்கள் என்று அறிவதிலே இருந்தது. மாணிக்கத்திற்கு எதையும் வெளிப்படையாகச் சொல்ல பிடிக்காமல் அம்மாணவர்களிடமிருந்து விலகிவிடுவான். விலகி வந்து யோசிப்பது சரஸ்வதி அக்காவை மட்டுமே… எத்தனை ஆண்டுகளானாலும் எத்தனைமுறை அவன் சுயமைதுனம் செய்திருந்தாலும் மாணிக்கத்தால் அவனது முதல் ஸ்கலிதத்தை அந்த இருட்டை மட்டும் மறக்க முடிந்ததே இல்லை. அப்போது அவன் உணர்ந்த… அந்த உணர்வைப்போல எப்போதுமே அவன் உணர்ந்தில்லை.

***