தோழி

நம் அரண்மனைக்கு வந்திருக்கிற இந்தத் தூதுவானைப் பார்..

இவன் வெளியூர்க்காரன். இவன், பிச்சை சோறு சாப்பிடுகிற ஒரு ஏழைப் பாணன் வீட்டில் பிறந்த ஒரு ஏழைப் பையன். இவன், நல்ல உணவு கிடைக்காமல், உடல் வளர்ச்சி அடையாமல் எலும்பும் தோலுமாக இருக்கிறான். இவன் வயதைப் பார்க்கும்பொழுது இவன் நிச்சயமாகப் படித்துக்கொண்டிருக்கிற ஒரு இளம் மாணவன்.

இந்த இளம் மாணவன் நம்மிடம் எவ்வளவு அறிவோடு பேசுகிறான்.

நம் தலைவன் இந்த இளம் அறிவாளியைத் தேர்ந்தெடுத்து இவனை நம்மிடம் தூது அனுப்பியிருக்கிறான்.

இந்த இளம் மாணவன் சிறந்த அறிவாளி.

இந்த இளம் மாணவன் மிகச் சிறந்த சான்றோன்.

தோழி..

நாம் நம் அரண்மனையில் இந்த அறிவாளிக்கு மிகச் சிறந்த விருந்து கொடுப்போம்.

-படுமரத்து மோகிகீரனார்-

குறுந்தொகை 33