செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை-
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, 5
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் 10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.
ரொம்பச் சம்பாத்தியம் பண்ணனும்னு எனக்கு ஆசை.
நான் வெளிநாட்டுக்குப் போகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பிரயாணத்துக்கான எல்லா முன் ஏற்பாடுகளும் செஞ்சாச்சு. என் மனைவி அவளால் முடிந்த அவ்வளவு ஒத்தாசைகளையும் அவள் எனக்குச் செய்தாள்.
நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்படணும்.
என் மனைவி என் முன்னால் வந்து நின்னுக்கிட்டிருக்காள். என் மனைவி அவளிடம் இருந்த நகைகள் எல்லாத்தையும் காதுகளிலும் கழுத்திலும் அணிந்துகொண்டு அழகாருக்காள். என் மனைவி தலையில் உச்சி எடுத்துச் சீவி அழகாகக் கொண்டை முடிந்திருக்கிறாள். கண்ணுக்கு மை எழுதியிருக்கிறாள். என் மனைவியின் அழகான கண்களில் கண்ணீர் சோகத்தோடு உக்காந்துக்கிட்டுருக்கு.
என் மனைவி அவள் பாதங்கள் நோகாமலும் நிலம் நோகாமலும் அவள் பாதங்களை மெல்ல எடுத்துவைக்கிறாள்.
என் மனைவி என் மடியில் உட்கார்ந்திருக்கிறாள். என் மனைவி என் மேல் சரிந்து சரிந்து அவள் என் மார்பில் படுத்துக்கொண்டாள்.
பச்ச மண்ணில் செய்த ஒரு மண் பானை. அந்தப் பானை ஒரு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. மழையில் நனைந்து நனைந்து அந்த மண்பானை கரைந்து கொண்டிருக்கிறது. அந்தப் பச்ச மண்பானை கரைந்து கரைந்து மழைத்தண்ணீரில் அது இரண்டறக் கலந்து விட்டது.
என் மனைவி என் பிரயாணத்த நிப்பாட்டிட்டாள்.
எயினந்தை மகன் இளங்கீரனார்
நற்றிணை 308