இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்
பாரத்து அன்ன- ஆர மார்பின் 5
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன-
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.

ஒரு மான். அது ஆண் மான். அந்த ஆண் மானுக்கு வயதாகி விட்டது.

அந்த ஆண் மானுக்கு அழகான இரண்டு கொம்புகள் இருந்தது. அந்த ஆண் மானுக்கு வயதாகி விட்டதால் அழகான அதன் இரண்டு கொம்புகளும் உதிர்ந்துவிட்டன.

அந்த ஆண் மானுக்குக் கொம்புகள் உதிர்ந்து தலை மொட்டத்தலையாகி விட்டாலும் அதன் நிறமும், அழகான அதன் புள்ளிகளும், அழகழகான அதன் கோடுகளும், அந்த ஆண் மான் இப்போதும் பேரழகோடுத்தான் இருக்கிறது.

அந்த ஆண் மான் ஒரு பொட்டல்காட்டில் காய்ந்த புல்லை மேய்ந்து கொண்டிருக்கிறது. இரை கிடைக்காமல் அந்த ஆண் மான் மெலிந்து விட்டது.
அந்தப் பொட்டல்காட்டில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

அந்த ஆண் மானால் கொளுத்துகிற வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

வயதான அந்த ஆண் மான் தண்ணீர் வற்றிய ஒரு குளத்தில் சேற்றில் படுத்துப் புரண்டு கொண்டிருக்கிறது.

பரணர்
நற்றிணை 265