கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி,
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு,
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை,
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து, 5
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில-
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. 10
ஒரு பாலைவனம்.
அந்தப் பாலைவனத்தில் வெயில் கடுமையாருக்கு.
அந்தப் பாலைவனத்தில் ஒரு சிறிய கல் ஊற்று இருக்கிறது. அந்தச் சிறிய கல் ஊற்றில் கொஞ்சங்காணு தண்ணி கெடக்கு.
ஒரு ஆண் யானை அந்தக் கல் ஊற்றுக்கு வேகமாக ஓடி ஓடி வந்து கொண்டிருக்கிறது. அது நீளமான தன் தும்பிக்கையை அந்தச் சிறுய கல் ஊற்றுக்குள் நுழைக்கிறது.
அந்தச் சிறுய கல் ஊற்றுக்குள் கெட்டிக்கிடந்த கொஞ்சாங்காணு தண்ணீரை அது தன் தும்பிக்கையில் உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது.
அந்த ஆண் யானை அந்தத் தண்ணீரைக் கொண்டுக்கிட்டு அதன் மனைவியைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறது.
அந்த ஆண் யானையின் மணைவி தண்ணித் தாகத்தில் நாக்கு வறண்டு போய் அது அந்தச் சிறிய கல் ஊற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.
மனைவியை வழியில் சந்தித்த அந்த ஆண் யானை தன் தும்பிக்கையில் இருந்த அந்தக் கொஞ்சங்காணு தண்ணீரை மனைவிக்குக் கொடுக்கிறது.
அறுவை வாணிகன் இளவேட்டனார்
நற்றிணை 186