பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது 5
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல்- பானாள்,
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் 10
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே?
ஒரு மலைக்காட்டில் இருக்கிறது எங்கள் ஊர்.
எங்கள் மலையில் உயரமான ஒரு வட்டப்பாறை இருக்கிறது.
எங்க பையன்கள் அந்த வட்டப் பாறையில் கூட்டமா உக்காந்திருக்காங்க. அவங்க சந்தோசமாக கொட்டு அடிச்சிக்கிட்டுருக்காங்க.
எங்க பையன்கள் சின்னச் சின்னக் கொட்டுக்களை அவர்கள் வெறுங்கையால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்க பையன்கள் அடிக்கிற கொட்டுச் சத்தத்தக் கேட்டு தினைக்காட்டில் மேய்ந்து கொண்டிருந்த கிளிகள் பயந்துபோய் பறந்து போய்க்கொண்டிருக்கிறது.
எங்க பையன்கள் உற்சாகமாகக் கொட்டு அடிச்சிக்கிட்டுருக்காங்க.
எங்க பையன்கள் உக்காந்திருக்கிற வட்டப்பாரைக்கு நேர் எதிரில் ஒரு புலியும் ஒரு யானையும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.
எங்க பையன்கள் ரசித்து ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பேரி சாத்தனார்
நற்றிணை 104