பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 5
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?- மகிழ்ந்தோர் 10
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?- இவள் கண் பசந்ததுவே!

ஒரு கடல்.

கடல் பொங்கி எழும்புகிறது.

கடல் அலைகள் கரையில் மோதி உடைகின்றன.

கடல்கரை அழகாருக்கு.

கடல்கரையில் ஒரு நாவல் மரம் இருக்கிறது. அந்த நாவல் மரத்தில் இருந்து நாவல் பழம் கீழே விழுந்து கிடக்கிறது. அந்த நாவல் பழத்தை வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.

நாவல் பழத்தை மொய்த்துக் கொண்டிருக்கிற வண்டுகளை ஒரு நண்டு துரத்துகிறது. அந்த நாவல் பழத்தை வண்டுகளிடம் இருந்து அந்த நண்டு பறித்துக் கொண்டது.

ஒரு நாரை நண்டைக்குறி வைத்து வந்து கொண்டிருக்கிறது.

தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிற நாரையைப் பார்த்ததும் நண்டு ஓட்டமாக ஓடுகிறது. நண்டு ஓட்டமாக ஓடிப்போய் அது ஒரு நண்டுச்செலவுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது.

கடல் அலைகள் கரையில் மோதி உடைகின்றன.

கடல் பொங்கி எழும்புகிறது.

கடல்கரை அழகாக இருக்கிறது.

அம்மூவனார்
நற்றிணை 35