அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் 5
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.

ஒரு சிறிய மலைக் கிராமம்.

அந்தக் கிராமத்தைச் சுற்றி காந்தள்செடிகள் உயிருள்ள வேலியாக, அந்தச் சிறிய கிராமத்துக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

அந்தச் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய விவசாயி.

அந்தச் சிறிய விவசாயி அவர் வயலில் மலைநெல் விதைத்திருக்கிறார்.

நெல்பயிர் நன்றாக வளர்ந்திருக்கிறது.

அவர்கள் களை எடுக்கிறார்கள்.

அவர்கள் வயலில் பெரிய பெரிய இலைகளோடு மலைமல்லிகை வளர்ந்திருக்கிறது. அவர்கள் அதைப் புடுங்கி எறிகிறார்கள்.

களையெடுத்த நெல்பயிருக்கு விவசாயி அருவித் தண்ணீரைப் பாய்ச்சுகிறார்.

அந்தச் சிறிய விவசாயிக்கு அந்த வருசம் நல்ல வெள்ளாமை.

அந்தச் சிறிய விவசாயி அவருடைய சிறிய வயலில் நல்ல வெள்ளாமை எடுத்தாலும் வருசம் பூராவுக்கும் அந்த நெல் அவர்களுக்கு ஆண்டு வரவில்லை.

அந்தச் சிறிய விவசாயி வீட்டில் அடுப்பில் உலை ஏறவில்லை. விவசாயி வீடு பட்டினியோடு இருக்கிறது.

அந்தச் சிறிய விவசாயி அரும்பாடுபட்டு அவர், யானைத் தந்தங்களைச் சேர்த்து வைத்திருந்தார்.

மிக உயர்ந்த மதிப்புள்ள அந்த யானை தந்தங்களை அந்தச் சிறிய விவசாயி குறைந்த விலைக்கு விற்பனை செய்தார்.

யானை தந்தங்களை விற்றுத்தான் அந்தக் குடும்பம் பசியாறியது.

-கபிலர்
குறுந்தொகை 100