துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் 5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,
அஞ்சல் என்ற இறை கைவிட்டென,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்,
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் 10
ஓர் எயின் மன்னன் போல,
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே.
ஒரு மலை.
அந்த மலையில் மூங்கில்கள் உயரமாக வளர்ந்திருக்கிற ஒரு மூங்கில் காடு.
மூங்கில் காட்டில் கடுமையாருக்கு வெயில்.
அந்தப் பெரிய மூங்கில் காட்டில் ஒரு சின்ன நரி.
நரிக்கு பெரும் பசி.
இந்தக் கடுமையான வெயிலில் வாடி, வதங்கிக் களைத்துப் போன ஒரு பெரிய ஆண் மான் நடக்க முடியாமல் மெல்லமாய் நடந்து வந்து கொண்டிருக்கிறது.
பெரும்பசியில் இருக்கிற நரி மானைத் துரத்துகிறது.
ஓட முடியாத அந்தப் பெரிய மான் அந்தச் சின்ன நரியிடம் அகப்பட்டுக்கொண்டது.
நரி, மானைக் கொல்லுகிறது.
பசி அடங்கும் வரை நரி அந்தப் பெரிய மானைத் தின்று கொண்டே இருந்தது.
அந்தப் பெரிய மானின் அவ்வளவு கறியையும் அந்தச் சின்ன நரியால் திங்க முடியவில்லை.
நரி தின்றுவிட்டுப் போட்ட மிச்சக்கறி அங்கேயே கிடக்கு.
இந்த மிச்சக்கறி பசியோடு வருகிற பிரயாணிகளின் பசியை அமத்தும்.
எயினந்தையார்
நற்றிணை 43