கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
‘சாறு’ என நுவலும் முது வாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- 5
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
‘கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் 10
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்’ எனவே.
எங்கள் தெருவில் ஒரு தாத்தா வந்து கொண்டிருக்கிறார். அவர் நொச்சிமாலை அணிந்திருக்கிறார். அவர் திருவிழாச் செய்திகளைச் சொல்லிக்கொண்டு வருகிறார்.
ஒரு பெண் தாத்தாவை வழி மறிக்கிறாள்.
அந்தப் பெண் தாத்தாட்டச் சொல்லுகிறாள்.
தாத்தா…
நம்ம ஊரில் ஒரு பாணன் இருக்கிறான். இவன் யாழ் இசைப்பதில் பெரிய ஞானி. சொந்தமாகப் பாட்டுக்கெட்டிப் பாடுவதிலும் இவன் நிபுணன். புளுகுவதில் இந்தப் பாணன் கை தேர்ந்தவன்.
தாத்தா…
இந்தப் பாணன் நம்ம ஊர் ஏழைப் பெண்களிடமும், அவர்களைப் பெத்து வளர்த்த ஏழைத் தாய்மார்களிடமும் கபடமாகப் பேசி நம்மூர் ஏழை இளம் பெண்களை இந்தப் பாணன் அழைத்துக்கொண்டு போய் விடுகிறான். நம்மூர் ஏழை இளம்பெண்களை இந்தப் பாணன் விபச்சாரிகளிடம் விற்று விடுகிறான்.
தாத்தா…
நீங்கள் நம்மூர் சேரிக்குப் போகனும்.
நீங்கள் நம்மூர் சேரியில் உள்ள இளம் பெண்களிடமும், அவர்களைப் பெத்து வளர்த்த ஏழைத் தாய்மார்களிடமும் சொல்லணும்…
“பாணன் ஒரு ஏமாற்றுக்காரன்… பாணனை நீங்கள் நம்பாதீர்கள்… பாணனிடமிருந்து நீங்கள் விலகியே இருங்கள்… பாணனிடமிருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்…” என்று – நீங்கள் அவர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள் தாத்தா.
“நம்மூர் அழகான இளம் ஏழைப் பெண்கள் பாணனிடம் சிக்கிச் சீரழிவதை நீங்கள் தடுத்து நிறுத்துங்கள் தாத்தா…”
கூடலூர்ப் பல் கண்ணனார்
நற்றிணை 200