அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மெக்ஸிக்கோ மீதான டாரிஃப் திட்டங்களை இடைநிறுத்தியதனாலும் ஆசிய பங்குச் சந்தைகள் ஜப்பானிய தென் கொரிய பங்குச் சந்தைகள் மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகள் திங்களன்று உயர்ந்தன. இந்தியப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும் நிஃப்டி 56.90 புள்ளிகள் உயர்ந்து 11927.60 புள்ளிகளாகவும் தொடங்கியது.

காலை தொடக்கத்தில் 468 பங்குகளின் விலை ஏற்றம் கண்டும் , 183 பங்குகளின் விலை சரிவினை கண்டும், 46 பங்குகளின் விலை மாறாமலும் தொடங்கியுள்ளது.

இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், வேதாந்தா, டாடா ஸ்டீல், ஜீ என்டர்டெயின்மன்ட், எஸ் பேங்க், இண்டஸ்இந்த் பாங்க், எஸ்.பி.ஐ., டி.ஹெச்.எஃப்.எல், எடல்வைஸ் பைனான்சியல், மணப்புரம் ஃபினான்ஸ், இந்தியா சிமென்ட்ஸ் ஆகியவை ஆரம்ப வர்த்தகத்தில் ஏற்றத்தோடு தொடங்கியுள்ளது. முறையே ஜே.கே.வங்கி.ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃப்ரா மற்றும் பி.சி. ஜுவல்லரி பங்குகள் இறக்கம் கண்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள், இன்ஃப்ரா, ஐடி, எஃப்எம்சிஜி, ஆட்டோ, மெட்டல் மற்றும் ஃபார்மா ஆகியவற்றின் பங்குகள் வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம் கண்டுள்ளன.

இந்தியாவின் உற்பத்தி செயல்பாடு 14 மாதமாகங்களைக் காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது நாட்டின் உற்பத்தி துறை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 69.45 ரூபாயாக உள்ளது .

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதத்தை ஜூலை 1 முதல் வீட்டுக் கடனுடன் இணைக்கும் என்று அறிவித்துள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கியின் MCLR விகிதம் 8.30% -8.95 சதவிகிதமாக உள்ளதாகவும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

9060 கோடி வராக்கடன் ஏற்பட்டுள்ளதாக பாங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது

நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல் அண்டு டி நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 1.9 சதவீதம் உயர்ந்து ரூ.1,542 கோடியாக ஆக உயர்ந்துள்ளது.