வாரத்தின் இரண்டாம் செவ்வாய் கிழமை இன்று காலை தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 114.52 புள்ளிகள் உயர்ந்து 39,075.31 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 33.80 புள்ளிகள் அதிகரித்து 11706 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. காலை வர்த்தகத்தில் 403 பங்குகளின் விலை ஏற்றம் கண்டும் , 226 பங்குகளின் விலை சரிந்தும் , 25 பங்குகளின் விலை மாறாமலும் தொடங்கியுள்ளது.

துறை வாரியாக பார்க்கும் போது FMCGயைத் தவிர மெட்டல் ஃபார்மா இன்ஃப்ரா ஆட்டோமொபைல் மற்றும் வங்கிகள் சார்ந்த துறைகள் ஏற்றம் கண்டுள்ளன.

இந்தஸ் இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகளின் விலை உயர்ந்தும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.83 ஆக உள்ளது.

எஸ்பிஐ, எஸ்பேங்க், இந்தியா புல்ஸ் ஹவுசிங், ஹெச்.யூ.எல் மற்றும் ஓஎன்ஜிசி போன்ற பங்குகள் விலை குறைந்துள்ளது.

எச்டிஎஃப்சி அஸ்ஸட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்குகள் 6% வரை குறைந்துள்ளது.