சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் தொடங்கியது .  ஆரம்ப வர்த்தகத்தில்  முக்கிய பெஞ்ச் குறியீடுகள், இலாபத்தோடு  துவங்கின.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 117 புள்ளிகள் அதிகரித்து 39,086.21 ஆக இன்றைய வர்த்தகம் தொடங்கியுள்ளது.  நேற்று இறுதி நாளில்  38,969.80 முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது
 என்எஸ்இ நிஃப்டி 33.90 புள்ளிகள் 0.29 % உயர்ந்து   11,743.00 ஆக உயர்ந்தது.
 ஆட்டோ, வங்கி, நிதி சேவைகள், பார்மா மற்றும் ரியால்டி போன்ற துறை சார்ந்த குறியீடுகள் 0.40 சதவீதமும், 2 சதவீதமும் உயர்ந்தன.
அமெரிக்காவிற்க்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பங்குகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு லாபத்தை முதலீட்டாளர்கள் 2014 முதல் இதுவரை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ட்ராடெக் சிமெண்ட், பி.பி.சி.எல், ஆர்.ஐ.எல், ஏசியன் பெயிண்ட், மாருதி சுசூகி, எச்.யூ. எல், யூபிஎல், கோடக் மஹிந்திரா வங்கி, டைட்டான் கம்பெனி மற்றும் பஜாஜ் பின்ஸ்வெர்வ் ஆகிய பங்குகள் இரு மடங்கு வாபத்தினை முதலீட்டாளர்களின்  கொடுத்துள்ளது.
  299 விலையில் வர்த்தகமாகும் ஐடிசி பங்குகள்  305 வரை உயரும் என பரிந்துரைக்கப்படுகிறது.
 கடந்த 2008-19 ம் ஆண்டு மார்ச் மாத காலாண்டில் நிகர லாபம் ரூ. 840 கோடியை ஈட்டியுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
335 நிலையில் வர்த்தகமாகும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் 332 வரை இறக்க வாய்ப்பு உள்ளதாக வர்த்தக  நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் பங்குகளின்  விலையில் சரிவு ஏற்பட்டதால் , ரிலையன்ஸ்  மதிப்பீட்டு பிஎஸ்இ மீது 7,95,628.55 கோடி ரூபாயாக குறைந்ததால் இந்த நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் இருந்த மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நாட்டில் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனமான சந்தை மதிப்பீட்டை பெற்றுள்ளது ,
வங்கியின் பரோடா நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 656.7 கோடியாகவும் அதன் நிகர வட்டி வருவாய் (NII) 22.7% YoY (+3.5% QoQ)  4,909.7 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது
Yes Bank, இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய தனியார் வங்கியான எஸ் பேங்க் பல ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபகரமான பங்காகவே இருந்துள்ளது இப்பொழுது குறுகிய கால முதலீட்டாளர்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 31, மார்ச் முடிவடைந்த காலாண்டில், கடனளிப்போர் பதிவு செய்த இழப்பால்  வங்கியின் பங்கு கிட்டத்தட்ட அரை சதவிகித மதிப்பை இழந்து விட்டது.
ஏப்ரல் 18 ம் தேதி, ரூ .255 ரூபாயாக இருந்த இந்த பங்கு மே 17ம் தேதி, மும்பை பங்குச் சந்தையில்   134.55 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
அசாஹி இந்தியா, அசோக் பிலட்கான், பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஹிந்துஸ்தான், பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, கனரா ஃபின் ஹௌவுசிங், சென்ட்ரல் பாங்க், சிப்லா, கும்மின்ஸ் இந்தியா, ஃப்யூச்சர் கன்ஸ்யூமர், ஜிஎஸ்எஃப்சி, இண்டஸ் இன்ட் வங்கி, ஜின்டால் சா, ஜே.கே. லக்ஷ்மி சிமெண்ட்,  எம்ஐஎல், மேக்ஸ் வென்ச்சர்ஸ், க்வெஸ் கார்ப், ராம்கோ சிமெண்ட்ஸ், ராம்கோ சிஸ்டம்ஸ் போன்ற பங்குகளின் காலாண்டு  முடிவுகள் இன்று  அறிவிக்க இருக்கின.
சின்டெக்ஸ் பிளாஸ்டிக் டெக்னாலஜி அதன் வாகன பிரிவு நிறுவனத்தினை 5% விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதால்.   இந்த பங்கு, மே 22, 2018 ஒப்பிடும்போது மே 16, 2019 வரை அதன் 52 வாரங்களுக்கான உயர்வு  55 ரூபாயாகவும்  மற்றும் 52 வாரத்தில் 14.75 வரையும் குறைந்தது.
சந்தையின் உறுதித்தன்மை நிலையாக இல்லாத காரணத்தால் சில்லறை முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கில் எச்சரிக்கையுடனும் பங்குகளின் அடிப்படைகளில் கவனம் செலுத்த அறிவுறுத்துகிறது.