காலை வர்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 39472.98 ஆகவும் நிஃப்டி 11875.20 புள்ளிகளோடு . சம நிலையிலும் அதேவேளையில் ரூபாயின் மதிப்பு அதிக அதிகரித்தும் தொடங்கியது.

காலை வர்தகத்தில் 580 பங்குகள் முன்னேறியுள்ள நிலையிலும், 345 பங்குகள் சரிந்தும், 67 பங்குகள் மாறாமலும் உள்ளன.

என்டிபிசி, எஸ் பேங்க் , எச்.டி.எஃப்.சி., பிரிட்டானியா, சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தும் ஜேஎஸ்டபில்யு ஜெட் ஏர்வேஸ், பிபிசிஎல், ஜீ என்டர்டெயின்மென்ட், கிராசிம், கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்த்ரா, ஆர்.ஐ.எல்., அதானி போர்ட், பஜாஜ் பின்சர்வ் மற்றும் இந்தஸ்இந்த் பாங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடனும் வர்த்தகமாகி வருகின்றது .

துறை வாரியாக கணக்கிடும் போது உலோகம், இன்ஃப்ரா மற்றும் எஃப்எம்சிஜி ஆகியவற்றில் வர்த்தகம் உயர்ந்தும் அதேவேளையில்
ஆட்டோ, எனர்ஜி மற்றும் மருந்து துறையின் வர்த்தகம் குறைந்தும் வர்த்தகமாகிறது.

நாட்டின் நான்காவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது 100வது விமான பயணத்தை தொடங்கியுள்ளது.

இண்டிகோ நிறுவன பங்குகளின் விலை 1% அதிகரித்துள்ளது.

மேற்கண்ட இரண்டு விமான நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதால். அதன் விலைகள் ஏற்றம் கண்டுள்ளது

எஸ்.பி.ஐ., ஜே.கே. & கே பாங்க், சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் போன்ற பொதுத்துறை வங்கிகளின் பங்குகளில் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி பி.சி.ஐ யில் வங்கி குறியீட்டு எண் 1.5% அதிகரித்தது.

இன்றைய சந்தை நகர்த்துவு பகுப்பாய்வின்படி கீழ் கண்ட நிறுவனங்களின் பங்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகளை 3058லிருந்து 3098 வரை வாங்கலாம். இதன் இலக்கானது 3110 வரை உயர வாய்ப்புள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 360 வரை‌உயர வாய்ப்புள்ளது மேலும் கஜாரியா சிமெண்ட் பங்குகள் 591 வரை குறையவும் வாய்ப்பிருக்கிறது. எல் அண்டு டி பங்குகள் 1600 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மோர்கன் ஸ்டான்லி, நோமுரா மற்றும் டாய்ச்ச் பாங்க் போன்ற உலகளாவிய தரகு நிறுவனங்களின் ஆலோசனைகளின்படி ,
நான்காவது காலாண்டில் இந்தர்பிரஸ்தா கேஸ் நிறுவனம் 313 கோடியை லாபமாக ஈட்டியுள்ளதால் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க மேற்கண்ட நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படுகிறது

அறிவிப்பு.

இங்கு வெளியிடப்படும் பங்குச்சந்தைகள் பற்றிய செய்திகள் பல்வேறு வணிக தரவு ஆலோசனைகளின் தொகுப்பாக வழங்கப்படுகிறது. பங்குச்சந்தை முதலீட்டு அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசகர்களிடம் இருந்து ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது. பங்குச்சந்தை பற்றிய எந்த ஒரு நிகழ்வுக்கும் உயிர்மெய் . காம் பொறுப்பேற்காது.