வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை இறுதி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 248.57 புள்ளிகள் அதிகரித்து 39683.29 புள்ளிகளாகவும் நிஃப்டி 80.70 புள்ளிகள் உயர்ந்து 11924.80 புள்ளிகளிலும் முடிவடைந்தது . முறையே 1782 பங்குகள் விலை உயர்ந்தும், 797 பங்குகள் குறைந்தும், 160 பங்குகள் சமநிலையிலும் வர்த்தகமாகியது.

உலகளாவிய சந்தைகள் மற்றும் வெளிநாட்டு நிதி முதலீடுகள் ஆகியவற்றின் சாதகமான போக்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்ததுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1,215.36 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். மேலும் 327.86 கோடி பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளதாக பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல், எஸ் வங்கி, என்டிபிசி, ஐஓசி, எல் அண்ட் டி ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டியும். ஜீ என்டர்டெயின்மென்ட், இந்தஸ்இந்த் பாங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்த்ரா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் இழப்புகளையும் சந்தித்தன .

செவ்வாய் கிழமை இன்று காலை தொடக்கத்தில் சமநிலையில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தையில்
சென்செக்ஸ் 38.88 புள்ளிகள் அதிகரித்து 39722.17 ஆகவும், நிஃப்டி 16.60 புள்ளிகள் 11941.40 ஆகவும் உள்ளது. 633 பங்குகளில் முன்னேற்றம் கண்டும், 272 பங்குகள் சரிந்தும், 45 பங்குகள் மாறாமலும் உள்ளன.

எஸ் வங்கி, கெயில் இந்தியா, அதானி போர்ட், ஜீ எண்டெர்டெயின்மென்ட், கோல் இந்தியா, ஏசியன் பெயிண்ட், எஸ்.பி.ஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி லாபத்தோடும் இமாமி, எச்பிசில் மற்றும் ஐஓசி பங்குகள் நஷ்டத்தோடும் வர்த்தகமாகி வருகிறது.
எஃப் எம் சி ஜி மற்றும் பொதுவுடைமை வங்கிகளின் சார்ந்த பங்குகள் மிகவும் அழுத்தத்துடனும் மெட்டல் ஆட்டோமொபைல் மென்பொருள் மற்றும் ஃபார்மா சார்ந்த துறை பங்குகள் விலை உயர்ந்தும் வர்த்தகமாகி வருகிறது.

ஹெச்.டி.எஃப்.சி., ஹீரோ மோட்டோ கார்ப், எஸ்.பி.ஐ., எச்.யூ.எல், கொடக் பாங்க், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபினான்ஸ், ஹெச்டிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை முறையே 1.02 சதவீதம் சரிந்துள்ளது.

மார்ச்சுடன் முடிந்த நான்காவது காலாண்டில் அதானி போர்ட் அதன் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றின் பங்குகள் 3.6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன.

ஜீ எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் நான்காவது காலாண்டில் 292.5 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது .

பஞ்சாப் நேஷனல் வங்கி, சன் பார்மா, ஸ்பைஸ்ஜெட், அதானி டிரான்ஸ்மிஷன், ஐஆர்பி இன்ஃப்ரா, மேக்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ், என்எம்டிசி, ஃபைசர், ஷிப்பிங் கார்ப்பரேஷன், ஷாலிமார் பெயிண்ட், எஸ்.எம்.எல் ஐசுயூ போன்ற 380 நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனம் நான்காவது காலாண்டில் 208.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.

என்எச்பிசி நிறுவனம் 492.3 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்டெர் குளோப் ஏவியேஷன் நிறுவனம் 589.6 கோடியை லாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 7767 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமையன்று 69.65 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியை கண்டுள்ளது.

எச்டிஎஃசி வங்கி. இன்ஃபோசிஸ். ஐடிசி. ஓஎன்ஜிசி. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்.எஸ்பிஐ. டிசிஎஸ் மற்றும் நிஃப்டி 50 பியூச்சர் இன்றைய குறுகிய கால வர்த்தகத்தில் முதலீடுகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றன.

அறிவிப்பு.
இங்கு வழங்கும்படும் பங்குச் சந்தைகள் பற்றிய செய்திகள். பல்வேறு சந்தைசார்ந்த தரவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எழுதப்படுகிறது. பங்குச் சந்தை முதலீடு அபாயத்திற்கு உட்பட்டது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனையின் பேரில் முதலீடு செய்யவும். உயிர்மை.காம் எந்தவொரு நிகழ்விற்க்கும் பொறுப்பேற்காது.