இன்கோர் மென்பொருள், லக்ஷ்மி ஓவர்சீஸ் இண்டஸ்ட்ரீஸ், எம்.வி.எல். நகோடா, நைட்கோ, ஆர்ச்சிட் பார்மா, யுனைடெட் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

காலை வர்தகத்தில் வங்கி நிஃப்டி 31,781.50 ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

சென்செக்ஸ் 4006.20 புள்ளிகள் உயர்ந்து 266.23 புள்ளிகளிலும். நிஃப்டி 84.50 புள்ளிகள் உயர்ந்து 12030.40 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது இன்று காலை தொடக்கத்தில் சுமார் 1048 பங்குகளில் முன்னேற்றம் கண்டம், 796 பங்குகள் சரிந்தும் மற்றும் 102 பங்குகள் சமநிலையிலும் உள்ளன. வெள்ளிக்கிழமையன்று எண்ணெய் விலை 1.5 விழுக்காடு குறைந்துள்ளது.

பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி, ஜெ.எஸ்.டபிள்யு. ஸ்டீல், கோல் இந்தியா, ஹெச்பிசிஎல், பெர்கர் பெயிண்ட், இன்டிகோ மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் ஓஎன்ஜிசி, எச்யுஎல், கோடக் மஹிந்திரா வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.

டிசிஎஸ்.பஜாஜ் ஃபின்சர்வ்.எச்டிஎஃப்சி லைஃப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அடுத்த ஒரு மாதத்தில்‌ விலை உயரும் என அந்த நிறுவனப்‌ பங்குகள் பல்வேறு வணிக நிறுவனங்களால் வாங்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இலக்கு விலை 117.75 வரை உயரும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மார்கெட் விலை 114.

டிஎல்எஃப் நிறுவன பங்குகளின் விலை 199 வரை உயரும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை 191

சீமென்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 1330 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை 1288

அல்ட்ராடெக் சிமெண்ட் இலக்கு விலை 4810.
மணப்புரம் ஃபைனான்ஸ் 138.5.
ஐசிஐசிஐ வங்கி 436.
டிசிபி வங்கி 239 என இலக்கு விலை கொண்டு. மேற்கண்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது

அறிவிப்பு.
இங்கு வழங்கப்படும் பங்கு சந்தை பற்றிய ஆலோசனைகள் பல்வேறு வணிக நிறுவன அறிக்கைகளின் தொகுப்பாக வழங்கப்படுகிறது. பங்குச் சந்தை முதலீடு அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் எந்த ஒரு நிகழ்விற்கும் உயிர்மை.காம் பொறுப்பேற்காது.