இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்துவருகிறது. ஜூலை 14, 2019 வரை நடபெறுகிற இத்தொடரில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் ஒன்றோடு ஒன்று மோத வேண்டும். மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் நடக்கவுள்ளது.

ஏற்கனவே 2 வெற்றிகளை தன்வசம் வைத்துள்ள இந்திய அணியும் 3 போட்டிகளில் தொடர்ந்து வென்றுள்ள நியூசிலாந்து அணியும் நாடிங்ஹாமில் நடக்கும் 18வது போட்டியில் மோதவுள்ளது.

இதுவரை தோல்வியை சந்திக்காத இந்த இரு அணிகளும் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது. அதே நேரம், இங்கிலாந்து நாட்டில் பல பகுதியில் வானிலை மிகவும் மோசமாக உள்ளதால், ஏற்கனவே இரண்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டி நடக்கும் நாடிங்ஹாம் பகுதியிலும் வானிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்  போட்டி ரத்தாகும் அல்லது பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3மணிக்கு இப்போட்டி தொடங்கும்.