நாடு முழுவதிலும் 412 கிளைகளைக் கொண்டுள்ள எச்டிஎஃப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம். வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை கையாளவும், துரித சேவைக்காகவும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தானியங்கி செயலியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கஸ்டமர் சென்ட்ரிசிட்டி. இன்னோவேஷன் என்ற கொள்கையோடு வாடிக்கையாளர்களின் சேவையே முதன்மையான குறிக்கோள் என கூறும் இந்த நிறுவனம். இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு.பர்வேஸ் முல்லா குறிப்பிடுகையில். எச்டிஎஃபசி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைகளை இலகுவாக மாற்ற ரோபாட்டிக்ஸ் சார்ந்த மென்பொருள் செயலிகளை உருவாக்க நிறுவனம் மென்பொருள் துறையில் முதலீடு செய்துள்ளதாகவும்.

இதன் மூலம் தவறான வாகக்குறுதிகளோ, அல்லது இடர்பாடுகள் இல்லாது. எங்களது வாடிக்கையாளர்கள் எந்த நேரதத்திலும் எங்களை அணுகும் வகையில் “இன்ஸ்டா சர்வ்” என்ற செயலியை உருவாக்கியுள்ளதாகவும்.

இதனால் வாடிக்கையாளர்களின் நேர விரயங்கள் சேமிக்க வழிவகை செய்து. இந்திய காப்பீட்டுத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை தாங்கள் எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செயலி மூலம் 3500க்கும் மேற்பட்ட பாலிசி சம்பந்தமான தகவல்களை பெற முடியும் எனவும். ஏற்கனவே சமூக ஊடகமான ட்விட்டர் மூலம் தாங்களது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 364.1 கோடி உயர்ந்து இதன் வருவாய் 14374.56 கோடியை ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகமாகி வரும் இதன் பங்குகள் 425.65 விலையில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.