நியூசிலாந்தின் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஹேய்லி ஜென்சன், கடந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிக்கோலா ஹேன்காக்கை மணமுடித்தார். ஒரு பாலின திருமணம் ஆகஸ்ட் 19, 2013 முதல் நியூசிலாந்தில் சட்டப்பூர்வமாக உள்ளது.  இச்சட்டம் கொண்டுவந்த பிறகு கிரிக்கெட்டின் உலகில் உள்ள ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்வது இது இரண்டாவது முறையாகும்.

பிக் பாஷ் லீக் Big Bash League (BBL) எனப்படும் போட்டி தொடரில் உள்ள அணியான மெல்போர்ன் ஸ்டார்ஸ் Melbourne Stars இல் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள்.

இவர்களது திருமணச் செய்தியை மெல்போர்ன் ஸ்டார்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “#TeamGreen இருந்து, கடந்த வார இறுதியில் தனது இணையான ஹேய்லி ஜென்சனை மணந்த நட்சத்திர வீரரான நிக்கோலா ஹான்கோக்கு வாழ்த்துக்கள்!” என வாழ்த்து தெரிவித்துள்ளது.

பிக் பாஷ் மகளிர் லீக்கின் முதல் இரண்டு பதிப்புகளில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆல் ரவுண்டர் ஜென்சன் விளையாடினார். மூன்றாவது  பதிப்பிற்காக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் சென்றார். ஆனால் ஹான்காக் தொடர்ந்து “டீம் க்ரீன்” னுக்காக விளையாடிவருகிறார்.

26 வயதான ஜென்சன்,  வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2014 ல் தனது முதல் சர்வதேச ஆட்டத்தை ஆரம்பித்தார்.

 

 

2018 ஆம் ஆண்டு அக்டோபரில்  வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக டி 20 போட்டிக்கான ‘வொய்ட் ஃபெர்ன்’ அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் 2017/18 விக்டோரியா மகளிர் பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரருக்கான ‘யுனா பைஸ்லே’ பதக்கத்தையும் அவர் பெற்றார்.

அதே நேரம்,  23 வயதான ஹான்காக், பிபிஎல்லின் சமீபத்திய சீசனில் சிறப்பாக ஆடினார். 14 ஆட்டங்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் அவர் பிபிஎல்லில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரராவார்.

கிரிக்கெட்டில் வேண்டுமானாலும் இந்த இரு நாட்டு வீரர்கள் எதிரிகளாக இருக்கலாம், ஆனால் காதல் என்று வரும்போது அப்படியல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இந்த இருவரும்.