ஐபிஎல் நேற்றைய ஆட்டம் (பெங்களூர் – சென்னை) சற்றும் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் நடந்து முடிந்துள்ளது.

பெங்களூருவில் ஆர்சிபி அணிக்கு எதிரான தோனியின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவ்வப்போது ஆக்ரோசமாக விளையாடி ரசிகர்களை மகிழ்விக்கும் தோனி நேற்று 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி, கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை தோனி விளாசினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் அந்த பந்தை மிக பொறுமையாக வீசினார், அதை சற்றும் எதிர்பார்க்காத தோனி கிரீஸ் நோக்கி ஓட ஆரம்பித்தார். தக்கூரின் பொறுமையான ஓட்டத்தால் ரன் அவுட் ஆகி சென்னை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. எனினும் தோனியின் ஆட்டம் ஆர்சிபி அணியை பயமுறுத்தியது.

ஏற்கனவே ரஸல், பாண்டியா போன்ற இளம் வீரர்கள் ஐபிஎல்லில் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ள நிலையில் தோனியும் தன்னுடைய பங்குக்கு பந்தை விலாசி எடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் 111மீட்டரில் ஒரு சிக்ஸ் அடித்து பந்தை மைதானத்தைவிட்டு விரட்டி அடித்தார்.

இதனால் நேற்று முழுவதும் சமூகவலைதளங்களில் தோனியின் ரசிகர்கள் “தோனி ஃபார் பிரதமர்” என்ற பதிவுகள் மூலம் வைரலாக்கினார். “ராகுல்காந்தி, மோடியை மறப்போம் தோனிதான் அடுத்த பிரதமர்” என்று ட்விட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.