இந்த பிரபஞ்சம் கருந்துளைகளால் உருவானது. அதிலிருந்து எண்ணற்ற பால்வெளிகள் காணப்படுகின்றன. அந்த பால்வெளிகளுக்குள் எண்ணற்ற கோள்கள் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு மையக்கோளை நோக்கி சுற்றிக்கொண்டிருக்கின்றன. அறிவியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிகொண்டிருக்கும் இந்நேரத்தில் வானில் நொடிநொடிக்கு எண்ணற்ற மாறுதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அகில உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் முதல் உள்ளூர் ஆராய்ச்சி நிறுவனங்கள் வரை வானை நோக்கி தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் சந்திரன் உருவான விதத்தைக் கூறும் 5 கோட்பாடுகள் மனிதகுலத்தையே ஆச்சிரியமூட்டும் வகையில் அமைந்துள்ளது.

இன்றும் பல ஆராய்ச்சிகள் சந்திரனை மையப்படுத்தியே நடந்துகொண்டிருக்கின்றன, இருந்தாலும் நமக்கு உறுதியான தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சந்திரனின் தோற்றத்தை, ஆராய்ச்சியாளர்கள் ஒருசில ஆதாரத்தில் சில கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர். அவை:

பிடிப்பு கோட்பாடு(Capture theory):

சந்திரன் புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படவில்லை என்றல் இது வேறு இடங்களில் உருவாகிருக்கலாம், அதாவது அருகில் உள்ள வெள்ளி(venus)ல் சுற்றி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது வேறு உலகிற்கும் சொந்தமானது என்றும் கூறியுள்ளார்கள்.

இந்த யோசனை சந்திரனின் தோற்றத்தை விளக்குவது அல்ல, இது நிலவு, பூமியை எப்படி சுற்றி வரும் என்பதையும், ஒரு சில பிரச்சனைகளையும் விளக்குகிறது. இந்த விளக்கத்தில் நிலா மற்றும் பூமியில், ஒரே மாதிரியான ஆக்ஸிஜன் ஐசோடோப்பு விகிதங்களைக் கொண்டிருக்கின்றன, காரணம் இவைகளின் மூலப்பொருள்கள் ஒரே குளத்திலிருந்து கிடைக்கின்றன என்று இந்தக் கோட்பாட்டின் மூலம் கூறியுள்ளார்கள்.

பிளப்பு கோட்பாடு(Fission theory):

19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் டார்வின்(Charles Darwin) மகன் ஜோர்ஜ்(George) என்பவர் மற்றொரு கருத்தை கூறினார்- (பிளப்பு கோட்பாடு), அதாவது சந்திரனை உருவாக்கிய பொருள், சூரியன் உருவான ஆரம்ப காலகட்டங்களில் சூரியனின் வெப்பத்தில் வளிமண்டலத்திலேயே உருகி அவை புவியின் மூலம் விண்வெளியில் வெளியேற்றபட்டது என்று கூறினார்.

ஆனால் இந்தக் கருத்தை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை காரணம், இது புயலின்போது பெரும் அளவிலான பாறைக்குழம்பை வெளியேற்றுவதற்கு போதுமான அளவு சுழற்சி இல்லை என்று சொல்லி இதை ஏற்றுகொள்ளவில்லை.

இணை உருவாக்கக் கோட்பாடு(Co-formation theory):

இந்தக் கோட்பாட்டின்படி, நமது சூரியமண்டலத்தில் உள்ள மாதிரி கோளின்(protoplanetary) வட்டினை(disk) பயன்படுத்தி அதில் உள்ள தூசி மற்றும் வாயுக்களை ஒருங்கிணைத்து பார்த்தல்.

நிலவு 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அருகே உருவானது இதன்படி, பூமிக்கும் நிலாவிற்கும் இடையேயான சமச்சீரற்ற ஒற்றுமை, வேற்றுமைகளை கணிக்கபட்டாலும் மற்ற இடங்களில் இது, இதன் ஒற்றுமைகளை கணிக்கமுடியாத அளவிற்கு குறுகியதாய் காணப்படுகிறது. இதனால் பூமி-நிலவு இவற்றிற்கு இடையேயான உயர் கோண விகிதத்தை விளக்கவும் முடியாது. இதுமட்டுமில்லாமல் நமது கிரகத்தை ஒப்பிடுகையில் சந்திரன் சிறிது அளவு இரும்பு போன்ற மைய அமைப்பை கொண்டுள்ளது என்று இந்தக் கோட்பாடு விளக்கியுள்ளது.

கோலப்பாறைகளின் மோதல்(colliding planetesimals):

நமது சூரிய மண்டலத்தில் மோதிக்கொண்டகோலப்பாறைகளால் உருவான நிலப்பரப்புகளில் நிலவு உருவாகிருக்கலாம் என சில விஞ்ஞானிகள் முன்மொழிந்தனர். இந்தக் கோட்பாட்டை பலரால் ஆதரித்தாலும், இது பூமி மற்றும் இயற்கை செயற்கைக்கோள் ஆகிவற்றிற்கு இடையேயான புவியல்ரீதியான ஒற்றுமைகளை விளக்கமுடியாது என்று இந்தக் கோட்பாடு விளக்கயுள்ளது.

தாக்க கோட்பாடு(Gainimpact theory):

இது சந்திரன் உருவானதை விளக்கும் முன்னணி கோட்பாடாக உள்ளது. இது சந்திரனின் பல அம்சங்களை விளக்கும் ஒரு சிறப்பான கோட்பாடு என்று ஜெர்மனியில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தின் ஐசோடோப் வேதியியல் நிபுணர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறியுள்ளார்.

இந்தக் கோட்பாடு புவி மற்றும் சந்திரன் ஆகியவற்றிற்கு இடையிலான ஆக்ஸிஜன் ஐசோடோப்பு விகிதங்கள் மற்றும் நிலவில் உள்ள  இரும்பு மையத்தினை இது தெளிவாக விளக்குகிறது. நிலவின் தற்போதைய நிலையை அடைவதற்கும், அவசியமான கோண வேகத்திற்கும் இது பொருந்துகிறது.