அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ திரைப்படத்தின் வெளியீட்டு நாள் திடீரென மாற்றப்பட்டிருக்கிறது.
மே 3-ஆம் தேதி வெளியாவதாக இருந்த இப்படம், 9-ஆம் தேதி வெளியாகுமென அறிவித்துள்ளனர். இதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.
சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹன்ஷிகா மோத்வானி, யோகி பாபு, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் C.S இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.