காப்பான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்னர் பல்கேரியா நாட்டில் நடைபெற்றுள்ளது.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இதன் டீஸர் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பொமன் இரானி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.