தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த மற்றும் சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டவருமான கலைமாமணி சீதலட்சுமி  நேற்று(பிப். 28) உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பர்மாவில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடக்கத் துவங்கி, சினிமா மட்டுமின்றி நாடகத்துறையிலும் ஜொலித்தவர். தனது நடிப்பு திறமைக்காக ”தந்தை பெரியார் விருது” பெற்றவர். ’கலைமாமணி’,’கலைசெல்வி’ உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றவர்.’எங்க வீட்டுப்பிள்ளை’, ’அன்னமிட்ட கை’, ’ஆண்டவன் கட்டளை தாய்மேல் ஆணை’, ’அன்புக்கரங்கள்’, ’கர்ணன்’, ’வீரப்பாண்டிய கட்டபொம்மன்’,’ ரத்தக்கண்ணீர்’, ’அன்புக்கு நான் அடிமை’ உட்பட 300க்கும் மேற்ப்பட்ட படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்துள்ளார்.

தமிழில் எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி, ஹிந்தியில் திலிப் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 87 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.நடிகை சீதாலட்சுமியின் உடல் சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம், எம் ஆர் பள்ளி அருகிலுள்ள அவரது மகளும் நடன இயக்குநருமான ராதிகா வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.